அதனால் என்ன? இந்த இரண்டு வார்த்தைகள் எனது வாழ்வில் மந்திரச் சொல். எப்பேர்ப்பட்ட மனநிலையிலும் ஊக்கம் கொடுக்கும் வார்த்தைகள் அவை. 2012 ல் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும்போது ஏற்பட்ட அனுபவம். அதன் தலைவர் (Chairman) ஊழியர்களை சந்திக்கும்போது, அவர்கள் என்ன புகார் தெரிவித்தாலும், என்ன குறை கூறினாலும், ' So What? What are you doing?' என்று கடந்து விடுவார். அந்த நிறுவனத்தில் அலுவலக அரசியல் (Office Politics) மிக மிக அதிகம். யாருமே 6 மாதங்களுக்கு மேல் வேலை செய்ய முடியாது. காரணம், ஒரு வேலையும் தெரியாதவர்கள், வேறு எங்குமே வேலைக்குப் போக முடியாதவர்களே மிகக் குறைந்த சம்பளத்தில் அதிக காலமாக பணியாற்றுவார்கள். எனவே அவர்கள் வேலையைவிட அரசியல் செய்வதுதான் அதிகம். இதை தலைவர் நன்றாக உணர்ந்திருந்தார். அவர் என்னிடம் சொல்வார்," நான் என்ன குப்பைத் தொட்டியா? இவர்களுக்கு சம்பளமும் கொடுத்து, எந்நேரமும் இவர்கள் குறைகளை என்மீது கொட்டுவதற்கு? இவர்களிடம் பேசினாலே நமது மூடையும் மனதையும் கெடுத்து விடுவார்கள்" அந்த " So What? " எனது மனத்தில் எதிரொலிக்க ஆரம்பித்தது. என்ன பிரச்னைகள், கஷ்டங்கள் வ...
ராஜசேகரின் நண்பர்களுக்கான பதிவுகள்..