முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் இலக்கியம் - ஒரு எளிய அறிமுகம்

 தமிழ் வாழ்க! எல்லோருடைய வீட்டின் மேல் 'தமிழ் வாழ்க" என்று பலகையில் எழுதி மாட்டிவிட்டால் தமிழ் வளர்ந்துவிடுமா? தமிழைப் பிழையின்றி எழுதப் படிக்க தெரிந்த, உண்மையான தமிழர்கள் எவ்வளவு பேர் உள்ளனர், தமிழ்நாட்டில்?  எவ்வளவு பேருக்கு தமிழின் புராதனம், அதை உணர்த்தும் நூல்களைப் பற்றி தெரியும்?  1980 க்கு முந்தைய காலகட்டங்கள் போல் தற்போதைய பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்களும் இல்லை; ஆசிரியர்களும் இல்லை; தமிழின்மேல் ஆர்வங்கொண்டு படிப்பாரும் இல்லை. அன்றைக்கு எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் தமிழ் மேல் ஆர்வத்தையும் ஊட்டினர்: புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையும் ஊக்குவித்தனர். அது போல தொடக்க பள்ளிகளில் தமிழை ஊட்டாமல் எப்படி தமிழை வளர்க்க முடியும்? தொழிற்கல்வி எதைவேண்டுமானாலும் படிக்கட்டும். வாழ்க்கைக் கல்வியைக் கற்க தமிழ் வேண்டாமா?           ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழின் இலக்கியங்கள், புலவர்கள், தமிழை வளர்த்தவர்கள் பற்றிய அறிவு வேண்டாமா? சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், திருக்குறள், பாரதியார், கம்பர், ஔவையார் போன்ற எதுவுமே தெரியாதவர் எப்படி தமிழை வளர்க்க முடியும்? ...

எது கெடும்?

 வாசித்ததில் நேசித்தது! தமிழ் இலக்கியங்களைப் படிக்க விரும்புபவர்கள் துவங்க வேண்டியது ஔவையாரிடம் இருந்துதான்! அவரளவுக்கு எளிமையாக, வாழ்வின் நெறிகளையும், ஒழுக்கமாக வாழ வழிகளையும் கூறியவர்கள் யாருமில்லை. இதைச் செய்யாதே என்று சொல்லாமல், இதைச் செய்தால் கெட்டுவிடும் என்று வலியுறுத்துவது சிறந்த நடை. அனைவரும் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டிய கருத்துக்கள். படித்து பயனுறுங்கள். எது கெடும்? v   பாராத பயிரும் கெடும். v   பாசத்தினால் பிள்ளை கெடும் v   கேளாத   கடனும் கெடும். v   கேட்கும்போது உறவு கெடும். v   தேடாத செல்வம் கெடும். v   தெகிட்டினால் விருந்து கெடும். v   ஓதாத கல்வி கெடும். v   ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். v   சேராத உறவும் கெடும். v   சிற்றின்பன் பெயரும் கெடும். v   நாடாத நட்பும் கெடும். v   நயமில்லா சொல்லும் கெடும். v   கண்டிக்காத பிள்ளை கெடும். v   கடன்பட்டால் வாழ்வு கெடும். v   பிரிவால் இன்பம் கெடும். v   பணத்தால் அமைதி கெடும். v   சினமிகுந்தால் அறமும் கெடும். v   சிந்திக்காத செயலும...