முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எது கெடும்?

 வாசித்ததில் நேசித்தது!

தமிழ் இலக்கியங்களைப் படிக்க விரும்புபவர்கள் துவங்க வேண்டியது ஔவையாரிடம் இருந்துதான்! அவரளவுக்கு எளிமையாக, வாழ்வின் நெறிகளையும், ஒழுக்கமாக வாழ வழிகளையும் கூறியவர்கள் யாருமில்லை.

இதைச் செய்யாதே என்று சொல்லாமல், இதைச் செய்தால் கெட்டுவிடும் என்று வலியுறுத்துவது சிறந்த நடை. அனைவரும் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டிய கருத்துக்கள். படித்து பயனுறுங்கள்.

எது கெடும்?

  • v  பாராத பயிரும் கெடும்.
  • v  பாசத்தினால் பிள்ளை கெடும்
  • v  கேளாத  கடனும் கெடும்.
  • v  கேட்கும்போது உறவு கெடும்.
  • v  தேடாத செல்வம் கெடும்.
  • v  தெகிட்டினால் விருந்து கெடும்.
  • v  ஓதாத கல்வி கெடும்.
  • v  ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
  • v  சேராத உறவும் கெடும்.
  • v  சிற்றின்பன் பெயரும் கெடும்.
  • v  நாடாத நட்பும் கெடும்.
  • v  நயமில்லா சொல்லும் கெடும்.
  • v  கண்டிக்காத பிள்ளை கெடும்.
  • v  கடன்பட்டால் வாழ்வு கெடும்.
  • v  பிரிவால் இன்பம் கெடும்.
  • v  பணத்தால் அமைதி கெடும்.
  • v  சினமிகுந்தால் அறமும் கெடும்.
  • v  சிந்திக்காத செயலும் கெடும்.
  • v  சோம்பினால் வளர்ச்சி கெடும்.
  • v  சுயமில்லா வேலை கெடும்.
  • v  மோகித்தால் முறைமை கெடும்.
  • v  முறையற்ற உறவும் கெடும்.
  • v  அச்சத்தால் வீரம் கெடும்.
  • v  அறியாமையால் முடிவு கெடும்.
  • v  உழுவாத நிலமும் கெடும்.
  • v  உழைக்காத உடலும்  கெடும்.
  • v  இறைக்காத கிணறும் கெடும்.
  • v  இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
  • v  இல்லாலில்லா வம்சம் கெடும்.
  • v  இரக்கமில்லா மனிதம் கெடும்.
  • v  தோகையினால் துறவு கெடும்.
  • v  துணையில்லா வாழ்வு கெடும்.
  • v  ஓய்வில்லா முதுமை கெடும்.
  • v  ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
  • v  அளவில்லா ஆசை கெடும்.
  • v  அச்சப்படும் கோழை கெடும்.
  • v  இலக்கில்லா பயணம் கெடும்.
  • v  இச்சையினால் உள்ளம் கெடும்.
  • v  உண்மையில்லா காதல் கெடும்.
  • v  உணர்வில்லாத இனமும் கெடும்.
  • v  செல்வம்போனால் சிறப்பு கெடும்.
  • v  சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
  • v  தூண்டாத திரியும் கெடும்.
  • v  தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
  • v  காய்க்காத மரமும் கெடும்.
  • v  காடழிந்தால் மழையும் கெடும்.
  • v  குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
  • v  குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
  • v  வசிக்காத வீடும் கெடும்.
  • v  வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
  • v  குளிக்காத மேனி கெடும்.
  • v  குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
  • v  பொய்யான அழகும் கெடும்.
  • v  பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
  • v  துடிப்பில்லா இளமை கெடும்.
  • v  துவண்டிட்டால் வெற்றி கெடும்.
  • v  தூங்காத இரவு கெடும்.
  • v  தூங்கினால் பகலும் கெடும்.
  • v  கவனமில்லா செயலும் கெடும்.
  • v  கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதல் காதல் காதல்

  காதல் - ஒரு பார்வை "காதல் காதல் காதல் காதல் போயின்  சாதல் சாதல் சாதல்" - குயில் பாட்டில் பாரதியார். கண்டிப்பாக காதல் இல்லையேல் மனித இனமே அழிந்திருக்கும். காதலிக்காதவர், காதல் உணர்வு கொள்ளாதவர், காதலைப் பிடிக்காதவர் யார்தான் உண்டு? நினைக்கும்போதே இனிமையைத் தருவதில் காதலுக்கு ஈடுண்டோ? சற்று நேரம் காதலைச் சுவாசித்தாலே கவலைகள் மறந்து போகும். உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அந்தக் காதலைப் பற்றிய சில அலசல்களே இந்தக் கட்டுரை. கிரேக்கர்கள் காதலை 8 வகையாகப் பிரிக்கின்றனர். அதை பிறகு பார்ப்போம்.  எனது பார்வையில் அவர்கள் பெயர் வைத்தபடி, காதல் உறவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  1. பிளேட்டானிக் உறவு (Platonic Relationship) - அறிவுசார்ந்த சுத்தமான நட்பு. காம இச்சைகளுக்கு இடமில்லை. உடல் சார்ந்த கவர்ச்சி இல்லாதது. (Spritual, Intellectual Relationships). பேச்சிலும், கருத்திலும் மட்டுமே மனம் மயங்கும். அறிவு சார்ந்ததால்தான் பிளேட்டோவின் பெயரில் அழைக்கப்படுகிறது. 2. ஈராஸ் உறவு (Eros Relationship)- பார்க்கும்போது தலை முதல் கால் வரை 'ஜிவ்' வென்ற உணர்வு; பார்க்கவிட்டாலோ கனவுலகில் கற்பன...

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....