எலான் மஸ்க் (ELON MUSK)
"நிஜ உலக டோனி ஸ்டார்க் (IRON MAN)"
இந்த ஆண்டு சுமார் 200 பில்லியன் டாலர் நெட் வொர்த்தோடு பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு வந்துள்ளார் எலான் மஸ்க். என்னை மிகவும் கவர்ந்த மனிதர். பல்துறை வித்தகர்.
பொதுவாக பணக்காரர்கள் பட்டியலை நோக்கினால், பெரும்பாலும் ஒரு துறையில் வெற்றி பெற்று பணம் ஈட்டியவர்களே இருப்பார்கள். உதாரணத்திற்கு, பில் கேட்ஸ் - சாப்ட்வேர், வாரன் பபெட் - ஸ்டாக் எக்சேஞ்ச், மார்க் சுக்கர்பெர்க் - சமூக வலைத்தளம் (FB), ஜெப் பஸோஸ் - வணிகம் (Amazon) போல. ஆனால் எலானோ 4 துறைகளில் வல்லுனராகவும், வெற்றியாளராகவும் திகழ்கிறார்.
சாப்ட்வேர், ஏரோசயின்ஸ், ஆட்டோமொபைல்ஸ், நியூரோ டெக்னாலஜி என்ற நான்கு துறைகளிலும் புதுமைகளைப் புகுத்தி புதிய உலகத்தையே உருவாக்கி வருகிறார். எலானுக்கு பணம் சம்பாதிப்பதைவிட புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குவதில்தான் அதிக அக்கறை. அதுவே அவர் தனிப்பண்பு.
சிறிய வாழ்க்கை குறிப்பு
49 வயதாகும் எலான், தென் ஆப்பிரிக்காவில் எளிய குடும்பத்தில் பிறந்தவர். 12
வயதிலேயே கோடிங் (Coding) கற்று 'ப்ளாஸ்டெர்'(Blaster) என்ற வீடியோ கேமை உருவாக்கி 500 டாலருக்கு விற்கிறார். (அது இப்போதும் இணையத்தில் உள்ளது) பின் சகோதரருடன் சேர்ந்து (Arcade gaming ) தொழில் தொடங்க முற்படுகிறார். மிகச்சிறிய வயதாகையால் முடியவில்லை. நாட்டில் நிலவும் சூழலும் பிடிக்கவில்லை. எனவே, கனடாவிற்கு வந்து சிறுசிறு வேலைகள் செய்கிறார். பிறகு அமெரிக்காவில் மேற்கல்வி பயில வந்தவர் ( ஏற்கனவே இயற்பியல், வணிகம் என 2 டிகிரி பயின்றவர்), இன்டர்நெட் வளர்ந்து வருவதை கண்டு, ZIP 2 என்ற நிறுவனத்தை துவங்குகிறார். பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம்.
சாதனைப்படிகள்
எலான் ZIP 2 வில், உள்ளூர் தொழில்களையெல்லாம் டைரக்டரி (Yellow Pages) ஆக முதன்முதலில் ஆன்லைனில் கொண்டுவருகிறார். மிகப்பெரிய வெற்றி. அந்த நிறுவனத்தை 307 மில்லியன் டாலருக்கு காம்பேக் (Compaq) நிறுவனத்திற்கு விற்கிறார். அப்போது வயது 28 தான். உடனே 'உலகம் பிறந்தது எனக்காக' என்று உல்லாசமாக வாழ்க்கையை அனுபவிக்க கிளம்பவில்லை.
அந்நாட்களில் பணப்பரிவர்த்தனை காசோலை மற்றும் காகிதங்களாகவே இருந்தது. அவற்றை ஆன்லைனுக்கு கொண்டு வரலாம் என்று x.com நிறுவனத்தை துவங்குகிறார். ஏற்கனவே 1999 ல் பேபால் (PAYPAL) என்ற பெயரில் எலக்ட்ரானிக் பணப்பரிவர்த்தனை செய்யும் கான்பினிட்டீ (Confinity) நிறுவனம் இயங்கி வந்தது. அதற்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று கணித்த எலான், x.com ஐ அதோடு இணைத்து, 2000ல் அதன் சிஇஓ ஆகிறார். (பேபால் இயக்குனர்கள் வணிக ராட்சசர்கள். Paypal Mafia என்று தேடி படியுங்கள்). 2002 ல் 1.5 பில்லியன் டாலருக்கு ஈ பே (eBay) பேபாலை வாங்குகிறது.
2002 ல் வரலாற்று சிறப்புமிக்க மூன்று நிறுவனங்களை துவங்குகிறார். டெஸ்லா - எலக்ட்ரிக் கார், ஸ்பேஸ் எக்ஸ்- ராக்கெட் தொழில் நுட்பம், சோலார் சிட்டி- சூரிய ஒளி மின்சாரம். ( TESLA, SPACE-X, SOLAR CITY). மூன்றும் இன்றைக்கு முன்னணி தொழில்நுட்பங்களை கொண்ட நாளைய உலகின் திறவுகோல்கள்.
அவை மட்டுமல்ல, 2016 ல் த போரிங் கம்பெனி- Hyperloop அதிவேக போக்குவரத்து, நியூரோலின்க்- மனித மூளை-கனிணி இணைப்பு, ஓபன் ஏஐ - செயற்கை நுண்ணறிவு (The Boring Company, Neuralink, open AI) நிறுவனங்களை துவங்குகிறார். இவற்றைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இணைய தளங்களில் படியுங்கள்.அனைத்தும் இன்றைக்கு வெற்றிகரமான நிறுவனங்கள்.
Most Surprising ingredient for Success - Failure
தோல்விகளே வெற்றியின் மூலப்பொருள்
பேபால் மிக மோசமான வணிக உத்தியாக (Paypal Voted as worst business idea) பத்திரிக்கைகள் எழுதின.
ஸ்பேஸ் எக்ஸில் 3 முறை ராக்கெட் ஏவுதல் தோல்வியிலேயே முடிந்தது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் இரண்டும் 2007-2008 ல் திவாலாகும் நிலைக்கு வந்தன. அதே ஆண்டில் எலான் மனைவியுடன் விவாகரத்தும் ஏற்பட்டது.
ஆனால் எலான், தன்னம்பிக்கையும் செயல் திறனும் ( Proactive) மிக்கவராக அனைத்தையும் வெற்றி கொண்டுள்ளார்.
எலானின் வெற்றிக்கான அடித்தளம்
சிறுவயதில் எலானுக்கு புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் என்பதைவிட வெறி என்றே சொல்லலாம். தினமும் 5-10 மணிநேரம் படிப்பார். வார இறுதியில் 2 புத்தகங்களை படித்து முடித்துவிடுவாராம். அவருக்காக புததகங்களை தேடி அவரது தாயார் நூலகம் நூலகமாக அலைவாராம். ஒரு முறை புத்தகம் கிடைக்காமல் முழு என்சைக்ளோபீடியாவையும் படித்து முடித்திருக்கிறார்..
காமிக்ஸ் புத்தகங்களின் மீது எலானுக்கு அலாதி பிரியம். அதில் வரும் சூப்பர் ஹீரோக்களை போல உலகை மாற்ற வேண்டும் என எண்ணுவாராம். அதுதான் பிற்காலத்தில் "புதுமையான எண்ணங்கள்- தவிர்க்கமுடியாத வெற்றி என்றானது (Innovative Idea - Undeniable success). அதனால் தான் டோனி ஸ்டார்க்கை போல அவரால் சிந்திக்க முடிகிறது.
படித்ததோடு விட்டுவிடாமல், அதை எங்கே, எப்படி நடைமுறைப்படுத்துவது என்று அறியும் திறன், ஒரு துறை உத்தியை அடுத்த துறையில் எப்படி செயல்படுத்துவது இரண்டிலும் அவர் ஜீனியஸ். (He is an Expert Generalist).
"Do you think I am Insane" - ஒரு கூட்டத்தில் அவர் கேட்டது.
" என்ன விந்தை, சரி போய் வேலையைப் பார்க்கலாம்" (How strange, well, back to work)
-- டிவிட்டரில் எலானின் பதில், ' நீங்கள்தான் உலகின் முதல் பணக்காரர் ' என்ற டிவீட்டுக்கு.
மேலும் எலான் மஸ்க்கைப் பற்றி படிக்க
Truly a Great Inspirator! Awesome Personality!முக்கிய தகவல்
எலானின் மற்றொரு கனவுத்திட்டம், அதிவேக பிராட்பேண்ட் இணையதள சேவை, குறைந்த கட்டணத்தில். இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் இல் ' ஸ்டார்லிங்க் (Starlink)' என்றதிட்டம் நிறுவப்பட்டுள்ளது. நமது பிராட்பேண்ட் இணையதளம் பைபர் ஆப்டிக் வயர்கள் மூலமாக செயல்படுகிறது. ஆனால் ஸ்டார்லிங்க் சாட்டிலைட்டில் இருந்து நேரடியாக வீட்டிற்கு இணைப்பு வழங்கும். நீங்கள் ஒரு ஆன்டெனா மட்டும் வாங்கினால் போதும். இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் 955 சாட்டிலைட்டுகளை ஏவியுள்ளது. ஸ்டார்லிங்க், தற்போது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மட்டும் செயல்படுகிறது. அடுத்து இந்தியாவுக்கு வருகிறது. அம்பானி VS எலான் மஸ்க் - ஆட்டம் ஆரம்பம்.
கருத்துகள்
கருத்துரையிடுக