எங்கே செல்கிறேன்?
எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை.(டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம் மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected.
இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan)', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந்த ஸ்டியரிங்க பிடிங்கப்பானு யார்கிட்டவாது கொடுக்கலாமென்று அடிக்கடி தோன்றும். ஆனால் இதுவரை யாரும் கிடைக்கவில்லை☺☺.
எனக்கு வாழ்க்கையில் மிகவும் பிடித்த விஷயங்கள் மூன்று.1.அறிவுத் தேடல், 2.பயணம், 3.பொது வாழ்க்கை. இது மூன்றும் எனது டிஎன்ஏ வில் உள்ளது போல. நானாக விரும்பிச்செல்லாவிட்டாலும் வாழ்க்கை அதை நோக்கியே செல்கிறது. நான் எப்போதெல்லாம் வாழ்க்கையில் சிக்கலை சந்தித்து விடை தெரியாது நிற்கின்றேனோ (bottle neck) அப்போதெல்லாம் கடவுள் பிரேக்கை போட்டு ஸ்டியரிங்கை அந்தப் பக்கம் திருப்புகிறார் என்று தெரியும். அந்த திருப்பத்தில் வாழ்க்கை பிரகாசமாக செல்லும்.
அடுத்து வரும் காலத்தை நான் சமுதாயத்துக்கு திருப்பி செலுத்தும் காலமாகத்தான் பார்க்கிறேன். அதை என் பக்கெட் லிஸ்டில் (Bucket List) முதலாவதாக வைத்துள்ளேன். நான் சார்ந்துள்ள பொறியியல் துறைக்கு வெப் போர்டல் web portal துவக்க உள்ளேன். ஏற்கனவே ஆயிரக்கணக்கில் சிவில் இஞ்சினியரிங் போர்டல்கள் உள்ளன. இருந்தாலும் என்னிடம் 10 GB அளவுக்கு டேடா Data உள்ளது. அதை பகிரவேண்டும். மேலும் சில திட்டங்களும் உள்ளன. வருங்காலத்தில் சிவில் இஞ்சினியரிங் துறை தரமானதாக, முக்கியமாக மதிப்பு மிக்கதாக ஆக்க, நண்பர்களோடு இணைந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட உள்ளேன்.
55 வயதைக் கடந்த பின்தான், SPB பாடியது போல, " போகும் பாதை தூரமே: வாழும் காலம் கொஞ்சமே" என்று பாடத் தோன்றுகிறது. உயிர் இருக்கும்வரை பயணித்துக் கொண்டே இருந்தால்தான் உடல், உள்ளம், வாழ்க்கை மூன்றும் செ(ம்)மையாக இருக்கும்.
"நீ நதி போல ஓடிக்கொண்டிரு" என்பதுதான் என்றும் என் மந்திரம்.
பயணிப்போம்!
கருத்துகள்
கருத்துரையிடுக