முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி!

ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் (15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக
சராசரியைவிட மிகமிக அதிகம். 

இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர். 
வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய்.
எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ? 
       இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'. 

'இக்கிகாய் ' என்றால் காலையில் எழுந்திருப்பதன் நோக்கம் என்று அர்த்தம்.( IKIGAI- The reason we getup in the morning). அதாவது ஒவ்வொரு நாளும்  காலையில் எழுந்திருக்க ஒரு காரணம் இருந்தால், வாழ்க்கையில் நோக்கம் இருக்கும்.. இல்லாவிட்டால் ' உங்கள் இருத்தலுக்கான காரணம் என்ன? ' என்று கேட்கலாம்.

உயிர் வாழ்வதற்கு ஒரு நோக்கம் வேண்டும். அப்படி ஒரு நோக்கத்தையோ, வாழ்வின் மதிப்பையோ கண்டுணர வேண்டும். அது நமது ஒவ்வொரு நாளுக்கும் வாழ்வதற்கான அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

நீங்கள் செய்யும் செயல்களில் மகிழ்ச்சியும், திருப்தியும் இருக்குமானால், உங்கள் செயல்களை கவனத்தோடு சிறப்பாக செய்வீர்களானால், வாழ்த்துக்கள்! - உங்களுக்குள் இக்கிகாயை கண்டு உணர்ந்துவிட்டீர்கள்!

சரி, இக்கிகாயை நாம் எப்படி காண்பது? அதாவது நாம் எப்படி சிறப்பாக
செயல்படுவது; மகிழ்ச்சியாக இருப்பது: வாழ்வின் நோக்கத்தை கண்டுபிடிப்பது. அதை இந்த படத்தின் மூலமாக விளக்குகிறார்கள்.

1, நீங்கள் எதில் சிறந்து விளங்குவீர்கள்?
     - படித்த, பயிற்சி பெற்ற துறை
     -  மனதிற்கு பிடித்த துறை

2. நீங்கள் எதை நேசிக்கிறீர்கள்?
    - மனதிற்கு பிடித்த துறை
    - உங்கள் இலட்சியம்

3. உலகிற்கு தேவையானது
     - உங்கள் இலட்சியம்
     - வாழ்க்கைத்தொழில் 

4. உங்களுக்கு வெகுமதியைப் பெற்றுத்தருவது
     - மனதிற்கு பிடித்த துறை
      - வாழ்க்கைத்தொழில் 
இவற்றை ஆழமாக அலசி ஆராய்ந்தால் உங்களுக்கான இக்கிகாயை உணர முடியும்.

 இக்கிகாய் மூலம் எப்படி ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது?

நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் சரி, அதிலிருந்து ஓய்வு பெறாதீர்கள்!
 
பெரும்பாலான ஜப்பானியர்கள் ஒருபோதும் ஓய்வு பெறுவதே இல்லை. வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஏதாவது சுறுசுறுப்புடன் செய்து கொண்டே இருப்பார்கள். தங்கள் ஆரோக்கியம் அனுமதிக்கும் வரை, தங்களுக்கு பிடித்தமான வேலையை செய்து கொண்டே இருப்பார்கள். ஓய்வு என்ற சொல்லே ஜப்பானிய அகராதியில் கிடையாது (உண்மையிலேயே).

உணவுப் பழக்க வழக்கம்

ஜப்பானியர்கள் சாப்பிடும் முன்போ, பின்னோ, "ஹரா ஹாசி பூ" (Hara hachi bu) என்று கூறுகிறார்கள். ஹரா ஹாசி பூ என்றால் உங்கள் வயிற்றை 80% மட்டுமே நிரப்புங்கள் என்ற அர்த்தம். வயிறு நிறைவதற்கு முன்னால் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். அந்த அளவு உணவே பரிமாறப்பட வேண்டும். அவர்களுக்கு சிறு சிறு உணவுகளாக நாளைக்கு 4-5 முறை உண்ணும் பழக்கமும் உண்டு. தேநீர் அருந்துகிறார்கள். (ஜப்பானியர் தேநீர் திருவிழா- Japanese Tea Ceremony அறிவீர்களா?) நம்ம ஊரில் தேநீரோடு பாலையும் வெள்ளைச் சர்க்கரையும் கலந்து கெடுத்து விடுகிறோம்.
Shikuwasa
அவர்களது முக்கிய உணவுகள் - டோபு (Tofu) - சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படுவது, இனிப்பு உருளை,  வாரத்தில் 3 நாட்கள் மீன், காய்கறிகள். மற்றும் எலுமிச்சை போன்ற 'ஷிக்குவாசா' (shikuwasa) என்ற பழத்தை  உண்கின்றனர்.

உண்ணும்போது முழு கவனமும் உணவின் மேல்தான் இருக்க வேண்டும். ( டிவி, மொபைல், புத்தகம், விவாதங்கள் கூடாது).

சமூகப்பிணைப்பு
அவர்கள் எப்போதும் குழுக்களாகவே இயங்குகின்றனர். குழுவாக இணைந்து சமூக பணி செய்வது இக்கிகாயின் ஒரு அங்கம்.
குறிப்பிட்ட விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் ஒன்றாக இணைந்து குழு அமைக்கின்றனர். அதற்கு 'மொவாய்' (Moai) என்று பெயர். இப்படி இணைந்து செயல்படுவது ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருப்பதோடு, பொருளாதார ரீதியாக உதவவும், பொழுது போக்கவும் வழி செய்கிறது.


சுறுசுறுப்பான மனமே இளமைக்கு வழி 
"A Sound mind in a Sound Body"
எப்படி உடலுக்கு பயிற்சி முக்கியமோ, அதேபோல மனதிற்கும் பயிற்சி அவசியம். நமது மூளையைப் பராமரிக்க அதைத் தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும். நாம் ஒரே மாதிரியான வேலைகளை செய்து, வயதாகும் போது மூளை சோர்வாக இருக்கிறது. நாம் புதிய தகவல்களை பெறும் போது, புதிய செயல்களை செய்யும் போது, மூளையின் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. மூளை புத்துணர்ச்சி அடைகிறது.
என்வே எப்போதும் வாழ்க்கையில் மாறுதல்களுக்கு உட்பட வேண்டும். நமக்கு தோதான பகுதி (comfort zone) களில் இருந்து, துணிந்து மாறுபட்ட செயல்களை செய்ய வேண்டியது அவசியம். கடினமான செயல்களை செய்யும்போதுதான் வலுவாகிறோம்.

மன அழுத்தம் (stress)
இன்றைக்கு மன அழுத்தமே இருக்கக் கூடாது என்று நினைக்கிறோம். ஆனால், ஓரளவுக்கு மன அழுத்தம் அவசியம் என்கிறார்கள். ஏனென்றால், மன அழுத்தம் ஏற்படும் போது மூளை அட்ரினல் சுரப்பியை தூண்டி அட்ரினலின், கார்ட்டிசோல் (adrenaline, cortisol)  திரவங்களை சுரக்க செய்கிறது. அது நமது உடலில் எதிர்ப்பு சக்தியை தூண்டி, வலுவாக்குவதோடு, இளமையாகவும் இருக்க உதவுகிறது.
(Dead Pool படத்தில் ஹீரோவுக்கு அதிக சித்திரவதை கொடுத்து, சாகும் அளவிற்கு மன அழுத்தத்தை உருவாக்கி, அவனுக்கு அதீத சக்திகள் - Super Powers கிடைப்பதாக காட்டியிருப்பார்கள்.)
அளவான ஸ்ட்ரெஸ் ஆரோக்கியத்திற்கான வழி! Little Stress is Good for You!

நடைப்பயிற்சி

ஜப்பானியர்கள் ஆரோக்கியத்தின் மிக முக்கிய காரணம் நடை. ஒவ்வொருவரும்
70 is old? Not in Japan
தினமும் 10- 20 கி.மீ தூரம் நடக்கிறார்கள். அதிக நேரம் உட்காருவதுதான் ஆரோக்கியத்தின் முதல் எதிரி என்கிறார்கள்.

பொது
மற்றவை உங்களுக்கு தெரிந்ததுதான். 7-8 மணி நேரம் இரவுத் தூக்கம் வேண்டும் - மெலட்டோனின் சுரக்க வேண்டும். 
விளையாட்டிலோ, மனம், உடலோடு உற்சாகம் அடையும் வகையில் பொழுது போக்குகள் இருக்க வேண்டும்..
நிறைய பயணம் செய்யுங்கள்.

இதற்கு மேல் படிப்பீர்களா எனத் தெரியாது. இன்னும் பயிற்சிகள், சிகிச்சைகள் (therapy), தியானம், ஆன்மீகம் எல்லாம் உள்ளன. கீழே புத்தகத்தை குறிப்பிட்டுள்ளேன்.

கடைசியாக, எளிதாக, உங்களுக்குள் இக்கிகாயைக் காண வேண்டுமா?

புதிய நல்ல பழக்கங்களுடன், புதிய நண்பர்களையும் சேர்த்து, புது இலட்சியங்களை தேடி புது வாழ்வை தொடங்குங்கள், வாழ்த்துக்கள்!






Oldest Lady living in the world - Kane Tanaka - 118 years
(அம்மாடியோவ்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

எங்கே செல்லும் இந்தப்பாதை?

  எங்கே செல்கிறேன்? எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை. (டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம்  மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected. இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan) ', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...