நல்ல படம் பார்க்கணுமா? இதோ!
பொதுவாக, சினிமாவில் இரண்டாம் பாகம் என்றாலே எனக்கு அலர்ஜி. எப்போதுமே முதல் படம்தான் அசலான புதிய கதையோடு
சிறப்பாகவும் அமைந்திருக்கும் என்பது எனது கருத்து. முதல் பாக வெற்றியை வைத்து மீண்டும் கல்லா கட்டவே இரண்டாம் பாகம் எடுப்பார்கள். (பாகுபலி போன்று ஒரே கதையை பாகங்களாக பிரித்து எடுப்பது வேறு) அந்த வகையில் இரண்டாம் பாகம் எடுக்கப் போகிறோம் என்ற அறிவிப்பு வந்தபோது, முதல் பாகத்தின் இனிய நினைவுகளையும் சிதைத்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. போதாக்குறைக்கு, ஜீத்து ஜோசப்பின் அடுத்தடுத்த படங்களும் அவவளவு சிறப்பாக இல்லை.

ஆனால், 2013 ல் வந்த முதல் பாகத்தின் அச்சு மாறாமல் அதன் தொடர்ச்சியாகவே கதை நகர்கிறது. அதே பரபரப்போடு, ஜார்ஜ் குட்டியின் குடும்பத்திற்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்ற பதைபதைப்போடு பார்த்து ரசிக்கும் வகையில் கதை எழுதி இயக்கியுள்ளார் ஜீத்து. முதல் பாகத்திற்கு 6 வருடத்திற்கு பின் கதை தொடங்குகிறது. முதற் காட்சியிலேயே அந்த பரபரப்பை கொண்டுவந்துவிடுகிறார். ஜார்ஜ் குட்டி இப்போது சற்று வசதியானவராக, சினிமா தியேட்டர் ஓனராக வருகிறார். சினிமா தயாரிக்கும் முயற்சியிலும் இருக்கிறார். ஆனால் அவர்களது மனத்தில் பயம் அப்படியே இருக்கிறது. இதற்கு மேல் சொன்னால் Spoiler ஆகிவிடும். படம் பார்க்காதவர்களுக்காக அப்படியே விட்டுவிடுகிறேன்.
முதல் அரை மணி நேரத்தில் கதை மெதுவாகவே நகர்கிறது. ஆனால் அனைத்து காட்சிகளுமே இறுதியில் துல்லியமாக இணைக்கப்பட்டுள்ளது. ஒரு காட்சிகூட தேவையில்லாத காட்சி இல்லை. அவ்வளவு நேர்த்தியாக கதை எழுதியுள்ளார் ஜீத்து. ஒரு நல்ல திரைப்படத்திற்கு நல்ல எழுத்தாளர் அவசியம். ஹாலிவுட்டில் கூட எழுத்தாளருக்குதான் மதிப்பு, தமிழ் சினிமாவைத் தவிர. அதே எழுத்தாளர் நல்ல இயக்குநராகவும் இருந்துவிட்டால் நல்ல திரைப்படம் கிடைக்கும் என்பதற்கு இந்தப்படம் நல்ல உதாரணம்.
பற்பல திருப்பங் களுடன் கிளைமாக்ஸ் காட்சிகள் சற்று சினிமாத் தனம் இருந்தாலும் கதையின் ஓட்டத்தில் இயல்பாகவே உள்ளது. மோகன்லாலின் யதார்த்தமான,மிகையில்லாத நடிப்பு கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. முரளி கோபி, கணேஷ் குமார் உடன் அனைத்து கதாபாத்திரங்களும் முதல் பாகத்தில் உள்ளது போலவே நன்றாக நடித்துள்ளனர். கேமெராவும் இசையும் இன்னும் பக்க பலம்.
எந்த அடிதடி, வயலன்ஸ் இல்லாமல் குடும்பத்தோடு ரசிக்க நல்ல த்ரில்லர்.
முதல் பாகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியடைந்தது. இரண்டாம் பாகமும் ஒரு ரவுண்ட் வரும் என எதிர்பார்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக