முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கனவுகளைத் துரத்துங்கள் - இரசவாதி

சுய முன்னேற்ற புத்தகங்கள் - ஒரு பார்வை - 4

எல்லா மனிதர்களையுமே நகர்த்துபவை கனவுகளும் ஆசைகளும்தான். "ஏழை
என்பவன் பணம் இல்லாதவன் இல்லை; கனவுகள் இல்லாதவன்தான்" என்று சொல்வார்கள். அந்த கனவுகளைச் செதுக்குவதற்கு சுய முன்னேற்றப் புத்தகங்கள் உதவுகின்றனவா? இன்னும் சில பிரபலமான புத்தகங்களைப் பார்த்துவிட்டு விரிவாக அலசலாம்.

இரசவாதி - -பாலோ கொயலோ ( The Alchemist - Paulo Coelho)

இந்தப் புத்தகம் 1988 ல் பாலோ கொயலோ என்ற பிரேசிலிய எழுத்தாளரால்
போர்த்துக்கீீீீீீசிய மொழியில் எழுதப்பட்டது. இன்றைக்கு 80 மொழிகளிில் மொழிபெயர்க்கப்பட்டு,
8 கோடி புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. இது தத்துவங்களை உருவகப்படுத்தப்பட்ட புனைகதை (Allegorical Novel) என்பார்கள். இதில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் படிக்கும்போது, வாழ்க்கைத் தத்துவங்கள் நமது மனதில் வெவ்வேறு எண்ணங்களாக விரிகிறது என்று விமரிசகர்கள் கூறுகிறார்கள். அந்தக் கதையைப் பார்ப்போமா?

ஸ்பெயினில் ஆன்டலூசியா என்ற கிராமத்தில் சான்டியாகோ என்ற ஆடுமேய்க்கும்
இளைஞன் இருந்தான். அவனது தந்தைக்கு அவன் பாதிரியாராக வேண்டும் என்று ஆசை. அவனுக்கோ பயணம் செய்வதும், உலகத்தை அறிந்துகொள்வதுதான் வாழ்வின் நோக்கம். தந்தையிடம் கூறுகிறான். அவருக்கும் இளம் வயதில் அதே நோக்கம் இருந்திருக்கிறது. 'தன்னால்தான் ஆசைப்பட்டபடி வாழ இயலவில்லை. நீயாவது உனது ஆசைப்படி வாழ்க. மேய்ப்பர்கள்தான் ஊர் ஊராக சுற்றுவார்கள்' என்று கூறி ஆடுகள் வாங்கி கொடுக்கிறார்.
சான்டியாகோ ஆன்டலூசியாவின் புல்வெளிகளைத் தேடித் தேடி இரண்டாண்டுகளாக ஆடுகளை மேய்க்கிறான். மாலையில் ஒரு பழைய தேவாலயத்திற்கு அருகில் உள்ள சிக்கமோர் என்ற மரத்தடியில் உறங்குவான். அவன் உறங்கும்போது, ஒரு கனவு அடிக்கடி வருகிறது. அதில் ஒரு சிறுமி 'எகிப்திய பிரமிடுகளுக்கு அருகில் அவனை அழைத்து சென்று, இங்கு ஒரு இடத்தில் புதையல் இருக்கிறது. வந்து எடுத்துக்கொள் 'என்கிறாள். எங்கே என்பதற்குள் விழித்து விடுகிறான். 
அந்தக் கனவைப் பற்றி தெரிந்து கொள்ள குறி சொல்லும் மூதாட்டி ஒருத்தியை சந்திக்கிறான். அவளோ, கனவில் வந்த மாதிரி கிடைத்தால், தனக்கு 10 சதவீதம் தரவேண்டும் என்று கூறி, ' நீ எகிப்தின் பிரமிடுக்கு செல். கண்டிப்பாக நீ கனவில் கண்டபடி புதையல் கிடைக்கும். நீ பணக்காரனாவாய்' என்கிறாள்.

பிறகு அவனுக்கு கடைவீதியில், அந்த சாலேம் நகரின் அரசர் 'மெல்கிஜிடெக்" என்று கூறிக் கொண்டு முதியவர் ஒருவர் அறிமுகம் ஆகிறார்.  சான்டியாகோ புதையலைத் தேடி செல்வதற்கு தான் உதவுவதாகவும் அதற்கு அவனிடத்தில் உள்ள ஆடுகளில் 10 சதம் கொடுக்க வேண்டும் என்கிறார். தான் புதையலைத் தேடி செல்வது அவருக்கு எப்படி தெரியும் என வியக்கிறான். சான்டியாகோவுக்கும் அவருக்கும் நிகழும் உரையாடலின் முக்கிய பகுதி:
நம்முடைய வாழ்வில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நமக்கு நிகழுகின்ற விஷயங்கள் மீதான கட்டுப்பாட்டை நாம் இழந்துவிடுகிறோம். பிறகு நம்முடைய வாழ்க்கையைத் தலைவிதி கட்டுப்படுத்த தொடங்குகிறது- என்பது மிகப் பெரிய பொய்.
நீ உண்மையிலேயே ஒன்றை ஆழமாக விரும்பும்போது, அந்த ஆழ்விருப்பம் பிரபஞ்ச ஆன்மாவிலிருந்து (Soul of the World) முளைக்கிறது. அதுவே இப்பிறவியில் உன்னுடைய பிறவி நோக்கம் (Personal Legend). அதை அடைய ஒட்டுமொத்த பிரபஞ்சமும் உன் உதவிக்கு வரும்..
புதையலைக் கண்டுபிடிப்பதற்கு நீ சகுனங்களைப்(Omen) பின் தொடர வேண்டும். கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாதையை உருவாக்கியுள்ளார். உனக்காக அவர் விட்டுச் சென்றுள்ள சகுனங்களை நீ அறிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான். 
பிறகு அவர் கருப்பு கல் (உரிம்) - ஆமாம் , வெள்ளை(தும்மிம்) - இல்லை அகிய இரண்டு கற்களைக் கொடுத்து, 'உனக்கு குழப்பம் வந்தால், இவற்றை வைத்து தெரிந்து கொள். நேரே ஆப்பிரிக்காவுக்கு செல். அங்கு நிறைய அரேபியர்கள் வருவார்கள்' என்கிறார்.

அவர் கேட்ட ஆடுகளைக் கொடுத்து விட்டு மீதமுள்ள ஆடுகளை விற்றுவிட்டு ஆப்பிரிக்கா செல்ல தயாராகிறான். பாரில் சந்தித்த ஒருவனிடம் ஆப்ரிக்கா செல்ல ஒட்டகம் வாங்க என்று பணத்தைத் தந்து ஏமாறுகிறான். 
கையில் பணமில்லாமல் ஒரு படிகக் கண்ணாடிப் (Crystals shop) பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் சில மாதங்கள் வேலை செய்கிறான். பணம் சேர்ந்த பின்னால் மீண்டும் கிளம்ப ஆயத்தமாகின்றான்.

அப்போது அப்போது ஒரு ஆங்கிலேயரைச் சந்திக்கிறான். அவர் தான் ஒரு ரசவாதியைத் தேடி எகிப்தில் 'அல் ஃ பெயும்' (Al- Fayoum) என்ற பாலைவனச்சோலை (Oasis) நோக்கிச் செல்வதாகக் கூறுகிறார். அந்த ரசவாதி 200 வயதானவர்; அவரால் எந்த உலோகத்தையும் தங்கமாக மாற்ற முடியும். அவரிடம் ஒரு ரசவாதக் கல்(Philosopher's Stone) மற்றும்  அமுதம் (Elixir of Life) உள்ளதாகக் கூறுகிறார். அவரோடு சேர்ந்து அந்த பாலைவனச் சோலையை அடைகிறான் சான்டியாகோ. அங்கே பழங்குடியினரிடையே சண்டை நடப்பதாகக் கூறுகிறார்கள்.
அங்கு பாத்திமா என்ற பெண்ணைப் பார்த்து காதல் கொள்கிறான். தான் தேடி வந்த புதையல் அவள்தான் என்றும் அவளை மனைவியாக்க விரும்புவதாகவும் கூறுகிறான். அவள் "நீீ  கனவுகளைத்தான் பின்பற்ற வேண்டும். நான் உண்மையிலேயே  உன் கனவின் ஒரு பகுதியாக இருந்தால், என்றேனும்  ஒருநாள் நீ என்னிடம் திரும்பி வருவாய்" என்கிறாள்.
அந்த கூட்டத்தின் தலைவரிடம்  பழங்குடியின மக்கள் இரவில் தாக்கப் போகிறார்கள் என்பதை சகுனங்கள் உணர்த்துவதாக கூறுகிறான். அதேபோல தாக்க, அனைத்து பழங்குடியினரையும் கொல்கின்றனர். தக்க சமயத்தில் எச்சரித்த சான்டியாகோவை ஆலோசகராகவும் நியமிக்கின்றனர்.

அங்கே அவன் ரசவாதியைச் சந்திக்கிறான்.அவர்,"அவர்,"நீ வருவாய் என்றும், உனக்கு என் உதவி தேவைப்படும் என்றும் காற்று என்னிடம் கூறியது" என்கிறார். மேலும், " ஒருவர் ஒன்றை உண்மையிலேயே ஆழமாக விரும்பும்போது, அவர் தன்னுடைய கனவை மெய்யாக்க அவருக்கு உதவும் பொருட்டு ஒட்டு மொத்த பிரபஞ்சமும் அவருக்கு சாதகமாகக் காய்களை நகர்த்துகிறது" என்கிறார். இப்போது அவரோடு தன் பயணத்தைத் துவக்குகிறான். இருவரும் வாழ்க்கை, பிரபஞ்சம், ஆன்மா, கனவுகள் பற்றி நிறைய விவாதிக்கின்றனர், வழியில் ஒரு மடத்தில் தங்குகின்றனர். அங்கு அவர், ஈயத்தை தங்கமாக மாற்றி அங்கு உள்ள துறவியிடம் இரு துண்டுகளைக் கொடுத்து ஒன்றை சான்டியாகோ திரும்பி வந்து கேட்டால் கொடுக்கும்படி சொல்கிறார். மற்றொரு துண்டை அவனிடம் கொடுக்கிறார்

சில நாட்கள் பயணத்திற்கு பின் ரசவாதி, சான்டியாகோ செல்லவேண்டிய திசையை காட்டிவிட்டு விடைபெறுகிறார்.  அவன் பிரமிடுகளை அடைகிறான். கனவில் கண்ட இடங்களை நினைவு படுத்தி தோண்ட ஆரம்பிக்கிறான். எதுவும் கிடைக்கவில்லை. . இரவாகிறது. அப்போது சில கொள்ளையர்கள் வருகின்றனர். அவனிடம் இருந்த தங்கத்தைப் பிடுங்கிக் கொண்டு, என்ன செய்கிறாய் என்று கேட்கின்றனர். இவன் கனவு கண்டதையும் புதையலைத் தேடி வந்ததையும் கூறுகிறான். உடனே அவர்கள் மேலும் சில இடங்களைத் தோண்ட வைக்கின்றனர். அவர்கள், அப்படி எதுவும் அங்கு இருக்க வாய்ப்பில்லை என சிரிக்கின்றனர். அவர்களின் தலைவன், சான்டியாகோவிடம் தனக்கும் அதுபோல் கனவுகள் வந்ததாகவும் ஆனால் அதில் புதையல் ஆன்டலூசியாவிலுள்ள பழைய தேவாலயத்திற்கு அருகிலுள்ள சிக்கமோர் மரத்தடியில் இருப்பதாக கூறிவிட்டு செல்கிறான். சான்டியாகோ திரும்பி மகிழ்ச்சியுடன் பிரமிடுகளைப் பார்க்கிறான். அவை அவனைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது,

திரும்ப தனது கிராமத்திற்கு வந்து சிக்கமோர் மரத்தடியில் தோண்டுகிறான்.புதையலைக் காண்கிறான். பொற்காசுகள், ஆபரணங்கள், சிலைகள் கொண்ட பேழை அது. தன் கனவைப் பின்தொடர்ந்து செல்லுகிறவர்களுக்கு வாழ்க்கை அள்ளி வழங்குகிறது என்று எண்ணுகிறான். மகிழ்ச்சியுறுகிறான்.' பாத்திமா, இதோ வந்து விட்டேன்' என்கிறான் உற்சாகமாக.


--- ஓரளவிற்கு கதையிலுள்ள அனைத்து சம்பவங்களையும் கூறிவிட்டேன். இப்போது உங்களுக்கு மனதில் ஓடும் எண்ணங்கள் என்ன?  அசை போடுங்கள். பின்னர் அலசலாம்...






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதல் காதல் காதல்

  காதல் - ஒரு பார்வை "காதல் காதல் காதல் காதல் போயின்  சாதல் சாதல் சாதல்" - குயில் பாட்டில் பாரதியார். கண்டிப்பாக காதல் இல்லையேல் மனித இனமே அழிந்திருக்கும். காதலிக்காதவர், காதல் உணர்வு கொள்ளாதவர், காதலைப் பிடிக்காதவர் யார்தான் உண்டு? நினைக்கும்போதே இனிமையைத் தருவதில் காதலுக்கு ஈடுண்டோ? சற்று நேரம் காதலைச் சுவாசித்தாலே கவலைகள் மறந்து போகும். உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அந்தக் காதலைப் பற்றிய சில அலசல்களே இந்தக் கட்டுரை. கிரேக்கர்கள் காதலை 8 வகையாகப் பிரிக்கின்றனர். அதை பிறகு பார்ப்போம்.  எனது பார்வையில் அவர்கள் பெயர் வைத்தபடி, காதல் உறவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  1. பிளேட்டானிக் உறவு (Platonic Relationship) - அறிவுசார்ந்த சுத்தமான நட்பு. காம இச்சைகளுக்கு இடமில்லை. உடல் சார்ந்த கவர்ச்சி இல்லாதது. (Spritual, Intellectual Relationships). பேச்சிலும், கருத்திலும் மட்டுமே மனம் மயங்கும். அறிவு சார்ந்ததால்தான் பிளேட்டோவின் பெயரில் அழைக்கப்படுகிறது. 2. ஈராஸ் உறவு (Eros Relationship)- பார்க்கும்போது தலை முதல் கால் வரை 'ஜிவ்' வென்ற உணர்வு; பார்க்கவிட்டாலோ கனவுலகில் கற்பன...

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....