முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொக்கிஷத்தை விற்ற துறவி

சுய முன்னேற்ற புத்தகங்கள் - ஒரு பார்வை -5

உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான சுய முன்னேற்ற புத்தக எழுத்தாளர்கள் எழுதி எழுதி, சம்பாதித்துக் கொண்டுள்ளனர். இவற்றில் பெரும்பாலும் வாழ்க்கையில் முன்னேற, பணக்காரராக, வெற்றி பெற என்கிற ரீதியில்தான் இருக்கும். ஏனென்றால்

மக்களுக்கும் அந்த ஆசைகள்தான் அதிகம்; உடனடியாக பணக்காரனாவது, உடனடியாக தலைவர்கள் ஆவது போல. இது வாழ்க்கையின் ஒரு பகுதிதான், மீதம்? அப்படி ஒரு வித்தியாசமான சிந்தனையை விதைக்கும் நூலை எழுதி பிரபலமாகி இருக்கிறார், ராபின் சர்மா.  நமது பண்பாடு இதைத் தானே காலம் காலமாக சொல்லி வருகிறது. ஆனால் அடுத்த தலைமுறைக்கு நாம் சொல்ல வேண்டியிருக்கிறது அல்லவா?

ராபின் சர்மா - 56 வயதாகும் இவர், வழக்கறிஞர்; கனடாவில் வாழும் இந்திய
வம்சாவழியினர். 1996ல்
'The Monk who sold Ferrari' எழுதி உலக புகழ்பெற்றார். பிறகு, ' Who will cry when you will die, The Greatness Guide, The Leader who had no title, The 5AM Club, Mega Living' போன்ற 15 நூல்களை எழுதியுள்ளார். இப்போது தலைமைப் பண்பு பயிற்சி முகாம்கள், ஆன்லைன் தலைமைப் பண்பு பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார். (பணக்காரர்களுக்கு மட்டும், ஆன்லைனில் 40,000 டாலர் கட்டணத்தில் எல்லாம் கோர்ஸ் உள்ளது, அவ்வளவு பணம் கட்டி படித்து, பில்கேட்ஸ், வாரன் பபெட்டுக்கெல்லாம் tough கொடுப்பார்களோ?😀💭)

The Monk who sold his Ferrari (தனது பொக்கிஷத்தை விற்ற துறவி - ராபின் சர்மா)

ஜூலியன் மான்டில் - ஒரு திறமையான, பிரபலமான, 18 மணிநேரம் உழைக்கக் கூடிய பெரும் பணக்கார வழக்கறிஞர். பணிச் சுமையாலும், பணக்கார வாழ்க்கை முறையாலும் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார். விவாக ரத்தாகிவிட்டது. அவருக்கென யாரும் இல்லை. 53 வயதில் 80 வயதானவராக தோன்றுகிறார். ஒருநாள் நீதிமன்றத்திலேயே மாரடைப்பு வந்து மயங்கி விழுகிறார். பிறகு தனது மேன்சனையும் பெராரி காரையும் விற்றுவிட்டு காணாமல் போகிறார். 3 வருடங்கள் கழித்து, தனது ஜூனியர் ஜானை சந்திக்கிறார் (ஜான் கூறுவதுபோல்தான் கதை சொல்லப்படுகிறது)

இப்போது ஜூலியன் 35 வயது மதிக்கத்தக்க இளைஞராக தோன்றுகிறார். கண்கள் பிரகாசமாக உள்ளன. ஜானிடம் தனது பயணத்தையும் , கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பாடத்தையும், ஒரு யோகியாக திரும்பியுள்ளதையும் விரிவாகக் கூறுகிறார்.

ஜூலியன் வீடு காரெல்லாம் விற்றுவிட்டு இமயமலைக்கு பயணமாகிறார்.

அவர் 'சிவானா' என்ற ஞானிகள் வாழும் கிராமத்தைப் (Sages of Sivana) பற்றி கேள்விப்பட்டு, அக்கிராமத்தைத் தேடி கண்டுபிடிக்கிறார். அங்கு 'யோகி இராமன்' என்ற ஞானியிடம் வாழ்க்கைக்கான ஏழு நல்லொழுக்கங்களை ( Seven Virtues of the Sages of Sivana) கற்கிறார். யோகி இராமன், 'நீ யாருக்காவது இதை கற்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், அதை கதையாகச் சொல்லி, விளக்குகிறார்.

கண்களை மூடிக்கொண்டு, பின்வரும் காட்சியை காட்சியை மனக்கண்ணில் சித்தரித்துக் கொள்ளுங்கள்.

“ஒரு பெரிய, செழுமையான அற்புதமான தோட்டத்தின் நடுவில் நீ அமர்ந்திருக்கிறாய். நீ எப்போதுமே  கண்டிராத மிக அழகிய  கண்ணைக் கவரும் மலர்களால் அத்தோட்டம் நிறைந்துள்ளது. அங்குள்ள சுற்றுச்சூழல் வெகு அமைதியாகவும், நிசப்தமாகவும் உள்ளது. இத்தோட்டத்தில் புலப்படும் உணர்வுகளை, அவற்றை ரசித்து மகிழத்   தேவையான காலமெல்லாம் உன்னிடம் இருப்பது போல, நீ அவற்றை அனுபவித்து மகிழ். உன்னைச் சுற்றிலும் உள்ள காட்சிகளைக்  காணும்பொழுது தோட்டத்தின் நடு மையத்தில், ஆறு அடுக்குகள் கொண்ட, சிவப்பு நிற கலங்கரை விளக்கம் ஒன்றை நீ பார்க்கிறாய். திடீரென்று கலங்கரை விளக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள் கதவு, அத்தோட்டத்தில் சூழ்ந்திருந்த அமைதியைக் கலைத்துக் கொண்டு ஒலியெழுப்பியவண்ணம் திறக்கிறது. அதிலிருந்து ஒன்பதடி உயரமும், தொண்ணூறு பவுண்டு எடையும்  கொண்டுள்ள ஜப்பானிய சுமோ மல்யுத்த வீரன் ஒருவன் வெளியே வந்து, தோட்டத்தின் நடுவில்  மெல்ல நடந்து வருகிறான்.
அவனது இடுப்பில் இளஞ்சிவப்பு நிற வயரைக் கட்டியுள்ளான். 

அந்த சுமோ வீரன் தோட்டத்தில் இங்குமங்கும் உலா வந்து கொண்டிருந்தபோது, பல ஆண்டுகளுக்கு முன்னர், யாரோ அங்கு விட்டுச் சென்றிருந்த தங்க நிற நிறுத்து கடிகாரத்தை அவன் கண்டெடுக்கிறான். அதை மாட்டிக்  கொண்ட மாத்திரத்தில் தடாலென்று மண்ணில் சாய்கிறான். மயக்கமுற்றவனாக , சத்தமின்றி அசைவின்றி அவன் கீழே விழுந்து கிடக்கிறான். ஒரு வேளை அவன் செத்துப் போய் விட்டானோ என்று நீ எண்ணுகிற அதே நேரத்தில், வீரன் கண் விழித்துப் பார்க்கிறான். ஒருக்கால் அருகில் மலர்ந்திருந்த மஞ்சள் நிற ரோஜா மலர்களின் மணம் அவனை உசுப்பியிருக் க்கூடும். சக்தி பெற்றவனாய், வீரன் துள்ளி எழுகிறான். ஏதோ ஒரு உள்ளுணர்வினால் உந்தப்பட்டவனாக , தனது இடது புறம் திரும்பிப் பார்க்கிறான். அங்கு அவன் கண்ட காட்சியால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறான். தோட்டத்தின் ஓரத்தில் இருக்கும் புதர் ளின் வழியொக ஒரு நீண்ட பாதை வளைந்து நெளிந்து செல்வதைக் காண்கிறான். அந்தப் பாதையெங்கும் ஒளிவிடும் வைரக் கற்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்தப் பாதையில் செல்லும்படி ஏதோ ஒன்று அவனுக்குள் சொல்கிறது. அவனும், அதற்குச் செவி கொடுத்தவனாய் அதில் நுழைகிறான். அந்தப் பாதை, என்றும் நிலைத்திருக்கும் மகிழ்ச்சி மற்றும் இறவாத பேரின்பமாகிய சாலைக்கு அவனை இட்டுச் செல்கிறது.”

__இந்தக்கதையில் ஏழு நல்லொழுக்கங்களும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைக் காண்போம்.

தோட்டம் - மனது : (Master your Mind)
  •  உன் மனதை வளர்த்தெடு (Cultivate your mind)
  • .உன் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாலும் அது செழித்து வளரும்
  • .உன் வாழ்க்கையின் தரம் உன் எண்ணங்களின் தரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.
"வாழ்க்கையில் தவறுகள் என்று எதுவுமே இல்லை. பாடங்கள் மட்டுமே உள்ளன.. எதிர்மறை அனுபவம் என்று ஒன்றுமே கிடையாது. வளரவும், கற்றுக் கொள்ளவும், சுயகட்டுப்பாடு, தன்னறிவு ஆகியவற்றுக்கான பாதையில் முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகள் மட்டுமே அங்கு உண்டு."

கலங்கரை விளக்கம் - வாழ்க்கையின் நோக்கம் : (Follow your Purpose)
  • வாழ்க்கையின் நோக்கம் என்பது, நோக்கமுள்ள ஒரு வாழ்க்கை (The Purpose of Life is a Life of Purpose). 
  • உனது வாழ்க்கைப் பணியைக் கண்டுபிடித்து அதை நிறைவேற்றுவது நிலையான மன நிறைவைத் தருகிறது
  • தெளிவாக வரையறுக்கப்பட்ட சொந்த, தொழில், சார்ந்த மற்றும் ஆன்மீக இலக்குகளை நிர்ணயித்துக் கொள். பின்னர், அவை பற்றிச் செயல்படுவதற்கான துணிவைக் கொள்.
சுமோ வீரன் - கைஜென்னைப் பயிற்சி செய் (Practice kaizen )

கைஜென் என்பது தொடர் வளர்ச்சிக்கான ஜப்பானிய பயிற்சிமுறை (Continuous Improvement) ( இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதவுள்ளேன்)
  • சுய ஆளுமைதான் வாழ்க்கையை ஆளுவதற்கான மரபணு.
  • வெற்றி என்பது நமது மனதில் இருந்துதான் தொடங்குகிறது.
  • ஞானம் (Enlightenment) என்பது மனம், உடல், ஆன்மா இவற்றை இடைவிடாது வளர்த்தெடுப்பதால் வருகிறது.
  • நீ செய்ய பயப்படுவனவற்றை செய் (
10 சடங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன - அவை, தனிமை, உடல்சக்தி, சுவாசப் பயிற்சி, படித்தல், சொந்த சிந்தனை, அதிகாலை எழுதல், இசை, பேச்சாற்றல், குணாதிசயம், எளிமை (Solitude, Physicality,Live Nourishment, Personal reflection, Early awakening, Music, spoken word,Congruent character, Simplicity)

இளஞ்சிவப்பு வயர் - ஒழுங்குமுறைக் கட்டுப்பாடு  (Live with Discipline)
  • துணிவான சிறிய செயல்களை தொடர்ந்து செய்தல்
  • சுயக் கட்டுப்பாட்டைப் பேணி முதிர்ச்சி பெற செய்தல்
  • நிறைவான வாழ்விற்கு மன உறுதி (Will Power) முக்கியம்
  • மௌன விரதம்
தங்க நிறுத்து கடிகாரம் - உனது நேரத்தை மதி (Respect your Time) 
  • நேரம் ஒரு விலைமதிப்பற்ற பொருள். அது புதுப்பிக்க முடியாதது.
  • பிரதான விஷயங்கள் மீது கவனம் செலுத்தி, சம நிலையை பாராமரித்தல் (Focus on Priorities and maintain balance)
  • வாழ்வை எளிமையாக்குதல்
நறுமணமுள்ள ரோஜா - தன்னலமற்ற சேவை  (Selflessly serve others)
  • நமது வாழ்வின் அர்த்தம், இறுதியில் சமுதாயத்திற்கு நாம் என்ன கொடுத்தோம் (Contribution) என்பதில் உள்ளது.
  • நமது நாட்களை புனிதமாக்க, கொடுப்பதற்காகவே வாழுங்கள்
  • நல்ல உறவுகளைப் பேணுங்கள் ( Cultivate Richer relationships)
வைரங்களின் பாதை - நிகழ்காலத்தில் வாழுங்கள் (Embrace the Present)
  • இந்தத் தருணத்தில் மகிழ்ச்சியாக வாழுங்கள் (Live Now)
  • நன்றியுணர்வை வளர்த்துக்கொள் (Practice Gratitude)
  • பயணத்தை ரசித்த வண்ணம், ஒவ்வொரு நாளையும் உனது இறுதி நாள் போல வாழுங்கள்.
"ஏதோ ஒரு தனிச் சிறப்பான காரணத்திற்காக நாம் இங்கே இருக்கிறோம். உனது கடந்த காலத்தின் கைதியாக இருப்பதை நிறுத்து. உனது எதிர்காலத்தை நிர்மாணிப்பவனாக மாறு."

கோடீஸ்வர வழக்கறிஞராக இருந்த ஜூலியன், ஞானம் பெற்ற துறவியாக விடைபெறுகிறார்.















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

எங்கே செல்லும் இந்தப்பாதை?

  எங்கே செல்கிறேன்? எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை. (டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம்  மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected. இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan) ', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...