முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கனவிலே கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

சுய முன்னேற்றப் புத்தகங்கள் - ஒரு பார்வை - 2


நார்மன் வின்சென்ட் ப்யல் என்பவரின்' நேர்மறை எண்ணங்களின் சக்தி' (The Power of Positive Thinking - Norman Vincent Peale) என்ற சுய உதவி புத்தகம்  வெளியான காலத்திலேயே கல்வியாளர்கள் பலராலும் எதிர்க்கப்பட்டது. அமெரிக்க மந்திரியாகவும், பாஸ்டராகவும் இருந்த நார்மன், மனோதத்துவத்தில் ஹிப்னாசிஸ் வழி முறைகளை, பைபிள் வழியில், பல்வேறு நபர்களின் வாழ்க்கை சம்பவங்களை கலந்து எழுதியிருப்பார். அவர் சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றினால் மனச்சிதைவுதான் ஏற்படும் என்ற கடுமையான எதிர்ப்புகளுக்கிடையேயும் அந்தப் புத்தகம் விற்றுக் கொண்டேதான் இருந்தது.

எம். ஆர் கோப்மேயர் என்பவர், ' எப்படி சீக்கிரம் பணக்காரர் ஆவது, இதோ உதவி, நீங்கள் விரும்பியது எதுவானாலும் அடைவது எப்படி' (How you can get Richer, Quicker, Here is Help, How to get whatever you want) புத்தகங்களை எழுதியுள்ளார். இவர்' The Success foundation' என்ற நிறுவனத்தை நிறுவி 'வெற்றி ஆலோசகராக'(Success Counselor) (!)  இருந்தார்!

நமது நாட்டிலும் விளம்பரப்படுத்தி, இந்தப் புத்தகங்களுக்கு. KFC அளவுக்கு வியாபாரம் நடந்து கொண்டேதான் உள்ளது.

இவர்களைப் போன்றே எம்.எஸ் உதயமூர்த்தி என்ற தமிழர், அமெரிக்காவில் பணிபுரிந்து தாயகம் திரும்பியவர், ' உன்னால் முடியும் தம்பி,நம்பு', 'எண்ணங்கள்' போன்ற புத்தகங்களை எழுதி தமிழ்நாட்டில் பிரபலமானார். (இளைஞர்களிடத்தில் வெகுவாக பிரபலமானதால் கட்சியெல்லாம் தொடங்கினார்)

நாவலாசிரியர் சிவசங்கரியின் 'சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது' குறிப்பிடத்தக்க புத்தகம்.

இப்போதும் ஆன்லைன் மீடியா கோலோச்சும் காலத்தில் சுய முன்னேற்றம், சுய உதவி, தன்னம்பிக்கை, பணக்காரர் ஆக, பிரபலமாக ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

'Chicken soup for the soul' (தமிழில்' உள்ளத்திற்கு ஒரு கோப்பை சூப்') தொடர் புத்தகங்களாக நூற்றுக்கணக்கில் (இதுவரை 250) வெளியிட்டு உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேலாக விற்பனையாகிறது. இந்த நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் பட்டியலிடப்பட்டு கோடிக்கணக்கில் இதன் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. மக்களுக்கு அறிவுத் தேடல் எந்த அளவிற்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். 
(நான் இந்த புத்தகங்களை படிக்க ஆரம்பித்தால், 2 பக்கம் முடிவதற்குள் தூக்கம் வந்துவிடும்)

சரி, இப்போது இளைஞர்களிடம் பிரபலமாக உள்ள சில புத்தகங்களைப் பார்க்கலாம். (Hai Dude,  Have you read these books?)

Rich Dad Poor Dad - Robert Kyosaki (தமிழில் - பணக்காரத் தந்தை  ஏழைத் தந்தை - ராபர்ட் கியோஸாகி) 
1997ல் கியோஸாகி எழுதி பிரபலமானது. 'ஆம்வே' (Amway - MLM) மூலமாகவெல்லாம் மார்க்கெட்டிங் செய்தார்கள். வியாபாரம் களைகட்ட, இன்று வரை 2 கோடி புத்தகங்கள் விற்றுள்ளார்கள். உடனே  பண நிர்வாக கல்வி மற்றும் பயிற்சி (Financial Education and Training, Seminar franchises) ஆரம்பித்து ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தார்கள். இப்போது இவர் நெட்வொர்த் 100 மில்லியன் டாலர்கள். சூப்பர்ல? சரி, புத்தகத்தில் என்ன இருக்கிறது, பார்க்கலாம்.

இவரது சொந்தத் தந்தை பி.எச்.டி படித்து டாக்டரேட் பெற்றவர்,அறிவு கூர்மையானவர்.
ஆனால் ஏழை. அவரது நண்பரின் தந்தை எட்டாம் வகுப்பைத் தாண்டாதவர். ஆனால் பணக்காரர். இவர்கள் இருவருக்கும் உள்ள சிந்தனைக்கும் தனக்கு கூறிய அறிவுரைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை கூறுகிறார்.
ஏழைத் தந்தை, 'தீயவை எல்லாவற்றுக்கும் காரணம் பணத்தின் மீதான அளவு கடந்த மோகம்தான். பணவிஷயங்களில் பாதுகாப்பாக நடந்து கொள். சவாலான விஷயங்களில் இறங்காதே. கடன் வாங்கியாவது வீடு போன்ற சொத்துக்களில் முதலீடு (Asset)செய்.' என்கிறார்.

பணக்காரத் தந்தையோ, 'தீயவை எல்லாவற்றுக்கும் காரணம் பணம் இல்லாததுதான். பண விஷயங்களில் சவாலான விஷயங்களை நிர்வகிக்க கற்றுக் கொள். முதலீடு எப்போதும் கடன் சுமையாக (Liability) இருக்க கூடாது' என்கிறார்.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதற்கும், ஏழைகள் மேலும் ஏழைகளாவதற்கும் , நடுத்தர வர்க்கத்தினர் கடன்களில் சிக்கி தவிப்பதற்கும் பணத்தைப் பற்றி அவர்கள் வீடுகளில் சொல்லித் தருவதுதான். பள்ளிகளில் பணத்தைப் பற்றி சொல்லித்தரவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
வாழ்க்கையில் நொடிந்து போயிருப்பது தற்காலிகமானது. ஆனால் ஏழையாய் இருப்பது நிரந்தரமானது.
  • பணக்காரர்கள் பணத்தை தங்களுக்காக வேலை செய்ய வைக்கிறார்கள். ஏழைகள் பணத்திற்காக வேலை செய்கிறார்கள்.
  • நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பதைவிட எவ்வளவை தக்க வைக்கிறீர்கள் என்பது முக்கியம்.
  • பணத்தின் மீதான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு சொத்து என் சட்டைப்பைக்குள் பணத்தைப் போடுகிறது. ஒரு கடன் என் சட்டைப்பைக்குள் உள்ள பணத்தை எடுக்கிறது.
  • எப்போதும் சொத்துக்களை அதிகரியுங்கள்
  • வரி என்பது அரசாங்கத்திற்காக உழைப்பது. வரி அனுகூலங்களைப் பெறுவதிலும் , சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதிலும் கவனம் செலுத்துங்கள்.
  • பணத்திற்காக வேலை செய்யாதீர்கள். கற்றுக் கொள்வதற்காக வேலை செய்யுங்கள்.
  • பயம், சந்தேகம், சோம்பேறித்தனம், மோசமான பழக்கங்கள், ஆணவம் ஆகிய தடைகளிலிருந்து மீளுங்கள்.
  • குழந்தைகள் வருங்காலத்தில் பண நிர்வாகத்தில் வெற்றி பெற பணத்தைப் பற்றி சொல்லிக் கொடுங்கள்.
மேலும் இதில் வீடு, மனைகள் வாங்குவது, முதலீடுகள், வருமானம், செலவீடுகளைப் பற்றி அலசுகிறார் ஆசிரியர்.
பணக்காரராக வேண்டுமா? வாங்கி படியுங்கள்.

Who moved my Cheese - Spencer Johnson ( தமிழில் -  என் சீஸை நகர்த்தியது யார் - ஸ்பென்சர் ஜான்சன்)

ஒரு வலைப்பின்னலான பாதை  அல்லது மேஸ் (Maze), அதில் வாழும் 2 எலிகள், 2 எலி சைஸ் மனிதர்கள், நால்வரும் சீஸ் நிறைய இருக்கும் ஒரு இடத்தை கண்டுபிடித்து
உண்டு அருகில் வாழுகின்றனர். எலிகள் தினமும் சீஸை தின்றுவிட்டு, அடுத்து சீஸ் இருக்கும் இடத்தை தேடி அலையும். மனிதர்கள் தின்றுவிட்டு தூங்குகின்றனர். திடீரென ஒருநாள் அங்கு சீஸைக் காணோம். எலிகள் ஏற்கனவே தேடி பழக்கப்பட்டதால், அடுத்து சீஸ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, செட்டில் ஆகின்றன. மனிதர்கள், எப்படி காணாமல் போயிற்று என்று ஒருவருக்கொருவர்  சண்டையிட்டு கொண்டும், கண்டிப்பாக அங்கேயே திரும்ப சீஸ் கிடைக்கும் என்று தங்கி பட்டினியில் கிடக்கின்றனர். ஒரு நபர் அதற்கு மேல் தங்கமுடியாது என்று வேறு இடம் தேடி, எலிகள் இருக்கும் இடத்தை அடைகிறார். போகும் வழியெங்கும்  சுவர்களில் மற்ற நபருக்காக பாதையை குறித்து விட்டு பாடத்தையும் எழுதிவைக்கிறார்.
அவ்வளவுதாங்க கதை. இந்தக் கதை சொல்லும் பாடம் என்ன?
  • மாற்றம் ஒன்றே மாறாதது. 
  • மாற்றத்தை எதிர்பாருங்கள்
  • மாற்றங்களை எச்சரிக்கையுடன் கண்காணியுங்கள்
  • சீக்கிரமாக மாற்றங்களுக்கு தயாராகுங்கள்.
  • மாறுங்கள்
  • மாற்றங்களை அனுபவியுங்கள்
  • பயத்தை விலக்கினால் சந்தோஷத்தை உணரலாம்
  • நீங்கள் மாறவில்லையென்றால், உலகம் உங்களை மறந்துவிடும்.
சின்ன கதை, மாற்றம் எனும் தத்துவம், அதுக்கு விளக்கம், கொஞ்ச பக்கங்கள்(76). ஆனால் வியாபாரம், 3 கோடி அனைத்து மொழிகளிலும் சேர்த்து. Hmmm......

(வசதியான இடத்தில்  (Comfort zone) செட்டில் ஆகிடக் கூடாதுங்கிறதுக்கு சுடுதண்ணீரில் போட்ட தவளைக் கதை சொல்வார்கள்!)

அடுத்த கட்டுரையில் மேலும் சில புத்தகங்களைப் பற்றி காணலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதல் காதல் காதல்

  காதல் - ஒரு பார்வை "காதல் காதல் காதல் காதல் போயின்  சாதல் சாதல் சாதல்" - குயில் பாட்டில் பாரதியார். கண்டிப்பாக காதல் இல்லையேல் மனித இனமே அழிந்திருக்கும். காதலிக்காதவர், காதல் உணர்வு கொள்ளாதவர், காதலைப் பிடிக்காதவர் யார்தான் உண்டு? நினைக்கும்போதே இனிமையைத் தருவதில் காதலுக்கு ஈடுண்டோ? சற்று நேரம் காதலைச் சுவாசித்தாலே கவலைகள் மறந்து போகும். உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அந்தக் காதலைப் பற்றிய சில அலசல்களே இந்தக் கட்டுரை. கிரேக்கர்கள் காதலை 8 வகையாகப் பிரிக்கின்றனர். அதை பிறகு பார்ப்போம்.  எனது பார்வையில் அவர்கள் பெயர் வைத்தபடி, காதல் உறவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  1. பிளேட்டானிக் உறவு (Platonic Relationship) - அறிவுசார்ந்த சுத்தமான நட்பு. காம இச்சைகளுக்கு இடமில்லை. உடல் சார்ந்த கவர்ச்சி இல்லாதது. (Spritual, Intellectual Relationships). பேச்சிலும், கருத்திலும் மட்டுமே மனம் மயங்கும். அறிவு சார்ந்ததால்தான் பிளேட்டோவின் பெயரில் அழைக்கப்படுகிறது. 2. ஈராஸ் உறவு (Eros Relationship)- பார்க்கும்போது தலை முதல் கால் வரை 'ஜிவ்' வென்ற உணர்வு; பார்க்கவிட்டாலோ கனவுலகில் கற்பன...

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....