வியக்கவைக்கும் டெக்னாலஜி!
பிட்காயின் ஒரு கிரிப்டோகரன்சி. கிரிப்டோக்ராபி (Cryptography) தெரியுமல்லவா? முக்கிய ரகசியங்களைப் பாதுகாக்க, அதை ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து பூட்டி, அந்த பாஸ்வேர்டைக் கண்டுபிடிக்க ஒரு புதிர் (Puzzle) கொடுப்பார்கள். நீங்கள் அந்த புதிருக்கான விடையைக் கண்டுபிடித்து, பாஸ்வேர்டைப் பெற்று திறக்க வேண்டும். The Da Vinci Code படத்தில் வருமே. அதுதான். அதே டெக்னாலஜியை கிரிப்டோகரன்சியை உருவாக்க பயன்படுத்துகின்றனர்.
Cryptographic Hash Function என்ற வழிமுறையில் (Algorithm) பெரிய டேட்டாக்களைக் கொடுத்து, 64 இலக்க ஹேஷ் (Hash) களாகப் பெறுவார்கள். அதாவது அவர்கள்
கொடுக்கும் கணிதப்புதிரை ( Mathematical Puzzle) வைத்து பிட்காயினுக்கான ஹேஷைக் கண்டுபிடிக்கவேண்டும் (Proof of work). அதிகமான பேர்கள் கண்டுபிடிக்க இறங்கினால் கடினமான புதிர்களாக வரும். அதேபோல் ஆரம்ப காலத்தில் எளிமையாகவும், இப்போது 88% பிட்காயின்கள் வெளியான பிறகு கடினமாக இருக்கும். கடினம் என்றால் கண்டுபிடிக்கும் கால அளவு அதிகமாகும்.
கொடுக்கும் கணிதப்புதிரை ( Mathematical Puzzle) வைத்து பிட்காயினுக்கான ஹேஷைக் கண்டுபிடிக்கவேண்டும் (Proof of work). அதிகமான பேர்கள் கண்டுபிடிக்க இறங்கினால் கடினமான புதிர்களாக வரும். அதேபோல் ஆரம்ப காலத்தில் எளிமையாகவும், இப்போது 88% பிட்காயின்கள் வெளியான பிறகு கடினமாக இருக்கும். கடினம் என்றால் கண்டுபிடிக்கும் கால அளவு அதிகமாகும்.
இந்த செயல் GPU (Graphic Processing Unit) அல்லது ASIC (Application Specific Integrated Circuit) மூலமாக செய்யப்படும். நாம் வீடியோ கேம் விளையாட கம்யூட்டரில் Ge Force, Radeon போன்ற Graphics Card போடுவோமே, அதுதான்.
பிட்காயின் மைனிங் அதிக அளவில் நடப்பதால், இந்த கார்டுகளுக்கெல்லாம் நல்ல டிமாண்ட். விலைகளும் ஏறிவிட்டன.
இந்த மைனிங், கிரிப்டோக்ராபியில் Hash Function Double SHA256 மூலமாகச் செயல்படுகிறது. ஒரு பிட்காயன் ஹேஷை க் கண்டுபிடிக்க பல கோடி (2.7 Quadrillion) டேட்டாக்கள் உள்ளிடப்படுகின்றன. ஒரு காயினைக் கண்டுபிடிக்க 72 TW எலக்ட்ரிசிட்டி செலவாகிறது. மொத்த செலவு இன்றைய மதிப்பில் 15,000 முதல் 20000 டாலர்கள். கனடா, ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் கரண்ட் செலவு கம்மி என்றுமைனர்கள் (Miners) அங்கே அதிகம் செல்வதாகக் கூறுகிறார்கள். இப்போது 10 நிமிடத்திற்கு ஒரு பிட்காயின் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 900. அவ்வளவுதான்.
நீங்கள் மைனிங் செய்ய GPU உடன் 3GB RAM லேப்டாப் இருந்தால் போதும். இப்போது ஆன்ட்ராய்டு மொபைலிலும் மைனிங் வசதி வந்துவிட்டது.
மைனர்கள் பலர் ஒன்று சேர்ந்து, ஒரு நெட் வொர்க்காக மைனிங் செய்வதும் உண்டு. கரண்ட் செலவு, அது போல் கிடைக்கும் பிட்காயினையும் பிரித்துக் கொள்வார்கள். இதற்கு மைனிங் பூல் என்று பெயர். Slush Pool தான் முதலாவது பூல். இப்போது AntPool, Poolin, F2 Pool போன்று நிறைய உள்ளன.
Hash Sample |
ப்ளாக் செயின் (Block Chain)
கண்டுபிடிக்கப்படும் ப்ளாக்குகள் ஹேஷ் பாயிண்டர் மூலம் முந்தின ப்ளாக்குடன்இணைக்கப்பட்டு, நேர முத்திரையிடப்பட்டு, ப்ளாக் செயினில் பதியப்படுகிறது. இந்த ப்ளாக் செயின் டேட்டா, பிட்காயின் வைத்துள்ள அனைவருக்கும் அளிக்கப்படுகிறது (Open Distributed Ledger). மேலும், பிட்காயின் மொத்த பரிமாற்றங்கள்- வாங்குதல், விற்றல் அனைத்தும் பதிவாகிறது. இந்தத் தகவல்களை ஹேக் செய்யவோ, திருத்தவோ முடியாது என்பதுதான் சிறப்பம்சம்.
வாலட் (Wallet)
பிட்காயினை பாதுகாக்கவும், பரிமாற்றங்களுக்கும், வாலட்கள் பயன்படுகின்றன. பிட்காயினுடன் Public Key, Private Key இரண்டும் வழங்கப்படும். Public Key, ப்ளாக் செயின் லெட்ஜரில் நுழைய உதவுகிறது. Private Key மூலமாகத்தான் பிட்காயினை வாங்கவோ, விற்கவோ முடியும். இந்த சாவியையும் பிட்காயின் அட்ரஸையும் வாலட்டில்தான் வைத்திருக்கவேண்டும். Private Key திருடப்பட்டால், அவ்வளவுதான், நமது பிட்காயின்கள் மாற்றப்பட்டு விடும். பிட்காயின் உரிமையாளர்கள் யார் என்று கண்டுபிடிக்கமுடியாது. வெறும் எண்கள் மட்டுமே இருக்கும். இதனால்தான் பிட்காயின் முதலில் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு Dark Web, Deep Web மூலமாக பயன்படுத்தப்பட்டது.
Initial Coin Offering (ICO)
கிரிப்டோ கரன்சி துவக்கும் நிறுவனங்கள் IPO போன்று, நிதி திரட்ட, ICO அறிவிக்கின்றன.இது வெறும் முதலீடு. இதில் முதலீடு செய்தால், நிறுவனத்தில் பங்குதாரராகவோ, கரன்சியாகவோ, டோக்கனாகவோ பெற்றுக் கொள்ள முடியும். டோக்கன்கள், கேசினோ டோக்கன்கள்போலத்தான். ஏதாவது வாங்க உபயோகப்படும்.
கிரிப்டோகரன்சியில் நிறைய அபாயங்களும், சந்தேகங்களும், சர்ச்சைகளும் இருந்தாலும், அதன் டெக்னாலஜி வியக்கவைக்கக் கூடியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
பிட்காயின் வெள்ளை அறிக்கை, மேலும் விவரங்கள் அறிய : www.bitcoin.org
Courtesy
Images: Google,
investopedia.com
கருத்துகள்
கருத்துரையிடுக