சிரிக்க மட்டும்!
டார்க் காமெடி அல்லது டார்க் ஹியூமர் (Dark Comedy or Dark Humour) என்றுசொல்வோமில்லையா? வாழ்க்கையில் அது போல நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் - நகைச்சுவை துணுக்குகளாகச் (Epigram) சொன்னால் அதுதான் மர்ஃபியின் விதி.
”தவறக் கூடியது அனைத்தும் தவறும்”(Whatever can go wrong will go wrong) என்று கூறுகிறது மர்ஃபியின் விதி.
அமெரிக்க வான்படை பொறியியலாளர் எட்வர்ட் மர்ஃபி என்பவரின் பெயரால் இது வழங்கப்படுகிறது. மர்ஃபி அமெரிக்க வான்படை ஊர்திகளில் பாதுகாப்பு முறைகளையும் எந்திரங்களையும் வடிவமைக்கும் பிரிவில் பணிபுரிந்தவர். அவற்றை வடிவமைக்கும் போது கிட்டிய பட்டறிவினால் அவர் உருவாக்கிய பழமொழியே மர்ஃபியின் விதியாக மாறியது. இதே பொருள் கொண்ட பழமொழிகள் முன்பே வேறுபல இடங்களிலும் காலங்களிலும் வழங்கப்பட்டிருந்தாலும் மர்ஃபியின் பெயரே அதற்கு நிலைத்து விட்டது.
அமெரிக்காவில் மர்ஃபியின் விதி என்றால் அதுவே இங்கிலாந்தில் சாட் விதி (Sod's Law).
அறிவியல் பார்வை
ரிச்சார்ட் டௌகின்ஸ் (Richard Dawkins) கருத்துப்படி, மர்ஃபி / சாட் விதி (Murphy / Sod law) போன்ற சட்டங்கள் முட்டாள்தனமானது அல்லது ஏற்புடையது அல்ல. ஒரு குறிப்பிட்ட வகை நிகழ்வுகள் எல்லா நேரத்திலும் ஏற்படலாம் என்று டௌகின்ஸ் சுட்டிக்காட்டுகிறார், ஆனால் அவர்கள் தொந்தரவாக இருக்கும் போது மட்டுமே கவனித்துள்ளனர். அவர் ஒரு உதாரணம் விமானத்தின் சத்தம் என்பதில் தலையிடுகிறார். விமானம் எல்லா நேரத்திலும் வானில் உள்ளது, ஆனால் அவை பிரச்சனையை ஏற்படுத்தும் போது மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இது உறுதிப்படுத்துதலை உறுதிப்படுத்தும் (confirmation bias) ஒரு வடிவமாகும். அதை உறுதிப்படுத்த அதே மாதிரி நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் அதற்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளை அவர்கள்எடுத்துக் கொள்வதில்லை.
எனது பார்வை
நமது வாழ்க்கையில் எதிர்மறையாக நடக்கும் நிகழ்வுகள், நமது மனதில் அழுத்தமாக பதிந்துவிடுகிறது. நல்ல நிகழ்வுகளை நாம் அனுபவித்துவிட்டு மறந்துவிடுகிறோம்.
எனக்கு முன்பு இதுபோல பல நிகழ்வுகள்
. 'டிராபிக் சிக்னல் நாம் அவசரமாக செல்ல நேரும்போதுதான் அதிகமாக சிவப்புக்கு மாறும்.
சிக்னல் சரியாக பச்சைக்கு மாறும் போதுதான் டூவீலர் பெட்ரோல் ரிசர்வு ஆகி வண்டி ஆப் (off) ஆகும்'.
"நாம் பேருந்துக்கு காத்திருக்கும் போது, நாம் செல்ல வேண்டிய இடத்துக்கான பேருந்து மட்டும் வராது; இல்லையேல் மிகத்தாமதமாக கூட்டத்துடன் வந்து நிற்காமல் போகும்."
இதுபோல் அடிக்கடி நடந்து மனச் சோர்வடைந்திருக்கிறேன். உண்மையில் அவை அபூர்வமாகத்தான் நடந்திருக்கும். ஒரு வருடத்தில் 4,5 முறை நடந்திருக்கும். ஆனால் அடிக்கடி நடப்பதுபோல் ஒரு உணர்வு. அப்படிதான் மர்ஃபியின் விதி என்பது என் கருத்து.
இதுபோன்ற எதிர்மறை நிகழ்வுகளையெல்லாம் மறந்து நல்ல நிகழ்வுகளை நினைவில் கொள்வதே நல்லது. அதுவே நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும்.
இந்த மர்ஃபியின் விதிகளை நகைச்சுவைகளாக படித்துவிட்டு மறந்து விடுங்கள்!
மர்ஃபியின் விதிகள் சிலவற்றை குறிப்பிடுகிறேன். முழுமையாக படிக்க இணைப்பும் கொடுத்துள்ளேன்.
சில மர்ஃபியின் விதிகள்
- ஒரு விஷயம் தவறாக நடக்க வாய்ப்பு இருக்குமேயானால் அது தவறாகவே நடக்கும்
- ஒரு விஷயம் தவறாக நடக்கவே வாய்ப்பில்லையென்றால் அது நிச்சயம் தவறாகவே நடக்கும்
- நாம் ஒரு விஷயத்தில் நான்கு விதமான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணித்தோமேயானால் அது எல்லாவற்றையும் மீறி நாம் எதிர்பாராதவகையில் எதிர்பாராத நேரத்தில் ஐந்தாவது தவறு வரும்
- எல்லாமே சரியாக நடப்பதுபோல் தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம்
- நீங்கள் ஒரு வரிசையில் நின்று கொண்டிருந்தால் அடுத்த வரிசைதான் வேகமாக நகர ஆரம்பிக்கும்
- ஒரு பழுதான பொருளை பழுது பார்ப்பவரிடம் காட்டும்போது (மட்டும்) அழகாக வேலை செய்யும்
- எந்த ஒரு வேலையும் செய்து முடித்தவுடன் அதை எளிதாக முடிப்பதற்கான வழி தென்படும்
- உண்மை உங்கள் பக்கம் இருந்தால் அதை யாருமே அதை நம்புவதில்லை
- யார் ஒருவரால் முடிவு எடுக்க இயலாதோ அவரால் தவறுகளை செய்யவே முடியாது
- ஏற்கனவே தாமதமாக இருக்கும் ஒரு மென்பொருள் வேலை, புதிதாக ஆட்களைச் சேர்த்தால் இன்னும் தாமதமாகும்
- நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உங்கள் முதலாளி நீங்கள் இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போதுதான் உங்கள் பின்னால் கையைக் கட்டிகொண்டு நிற்பார்
- இப்போது (உங்கள் காதலியிடம் ) எது ஆர்வமூட்டுகிறதோ அதுவே பின்னாளில் எரிச்சலூட்டும்
- ஒரு மேதாவி என்பவர் யாரென்றால் யார் ஒருவர் நுணுக்கமான விஷயங்களைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறாரோ அவர் தான். எவ்வளவு நுணுக்கம் என்றால் "ஒன்றுமில்லை" என்பது வரை. அதாவது ஒன்றுமில்லாத விஷயத்தை அதிகம் அறிந்து வைத்திருப்பவர் தான் மேதாவி
- ஒருவரிடம் 300 கோடி நட்சத்திரங்கள் இருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள் நம்பி விடுவார்.ஆனால் பக்கத்து மேசையில் தற்போது தான் வண்ணம் பூசப்பட்டிருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள், அதைத் தொட்டுப்பார்க்காமல் விட மாட்டார்!
- காதல் ஒரு சிறந்த எதிரி அல்லது மோசமான நண்பன்
- தவறான ஒரு முடிவை நம்பிக்கையுடன் அறிவுபூர்வமாக எடுப்பதற்கு பெயர்தான் லாஜிக்
- உங்களை விட்டால் இந்த இடத்துக்குத் தகுதியான ஆள் வேறில்லை என்று நிர்வாகம் நினைக்கும் அளவுக்கு நடந்து கொள்ளாதீர்கள். நடந்து கொண்டால் பின்னர் எப்படி உங்களுக்கு உத்தியோக உயர்வு அளிக்க இயலும்?
- எந்த கடிதத்திலும் இரண்டு கேள்விகளை (ஒன்றாக) மறந்தும் கேட்டு விடாதீர்கள். எந்தக் கேள்விக்கு மிகவும் பதிலை எதிர்பார்த்திருக்கிறீர்களோ அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் இருக்காது.
- உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனம் உங்களைவிட குறைந்த வேகத்திலேயே செல்லும்
- ஒரு உணவகத்தின் வெற்றி என்பது கூட்டமாக இருக்கையில் வேகமாகவும் கூட்டமே இல்லாத சமயத்தில் மிக மெதுவாகவும் பரிமாறுவதில் தான் இருக்கிறது
- ஒரு நாட்டின் அதிகாரத்துவமும், சாக்கடையும் ஒன்று தான். கழிசடைகள் மட்டுமே மேலே வர முடியும்
- யார் ஒருவன் தவறு வரும் போது சிரிக்கிறானோ அவன் அந்தத் தவறை யார் மீது சுமத்தலாம் என்று தெரிந்து கொண்டான் என்று அர்த்தம்
- ரகசியம் என்பது வதந்தியின் ஆரம்பம்
- ஒரு திட்டத்தின் படிகள் - (1) மகிழ்ச்சி (2) கற்பனை (3) குழப்பம் (4) தவறு செய்தவரைத் தேடுதல் (5) தவறே செய்யாதவரைத் தண்டித்தல் (6) சம்பந்தமே இல்லாதவருக்குப் பரிசு வழங்குதல்
- பணத்தின் அளவு பெருகப் பெருக அதன் மதிப்பு குறையும்
- எப்போது நீங்கள் நல்லபடியாக இருப்பதாக உணர்கிறீர்களோ, அப்போதே அந்த நிலை மாறிவிடும்
- இந்த விதிகளைத் தெரிந்து வைத்திருப்பதனால் உங்களுக்கு ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை ☺☺☺
மேலும் மர்ஃபியின் விதிகள் கீழே லின்க்கில்
கருத்துகள்
கருத்துரையிடுக