முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கையை மேம்படுத்தும் பிளேட்டோவின் கருத்துக்கள்

தத்துவ ஞானி பிளேட்டோவின் கருத்தியல்

( PLATONIC IDEALISM)

நமது தமிழின் பெருமை 'திருக்குறள்'. 2500 ஆண்டுகள் பழமையானது. ஆனால், இன்றைய காலத்துக்கும் பொருந்தும் கருத்துக்கள். தனி மனித ஒழுக்கம் - கல்வி, காதல், உறவுகள், சமூக ஒற்றுமை- வணிகம், கலாச்சாரம், பண்பாடு, ஆட்சிமுறை- அரசு, அதிகாரம் போன்று அதில் சொல்லப்படாத கருத்துக்களே இல்லை. அதிலும் எளிமையாக சொல்லப்பட்டிருப்பது அதன் தனிச்சிறப்பு. இதற்கு இணையான நூல் உலகத்தில் இல்லை.

அதே காலகட்டத்தில் (Classical Period), கிரேக்கத்திலும் கல்வியாளர்களும், 

தத்துவஞானிகளும் சிறந்து விளங்கினர். அவர்களில் முக்கியமானவர் 'பிளேட்டோ'. 

தத்துவங்களை நூல்களாகவும், உரைகளாகவும் மேற்குலகிற்கு அறிமுகப்படுத்தியவர். இன்றைக்கு இருக்கும் 'அகாடமி' (Academy) -கல்வி நிலையங்களையும், ஸிம்போசியம் (Symposium)- கருத்தரங்குகளையும் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர். மேற்குலகின் முதல் பல்கலைக்கழகத்தை ஏதென்ஸில் நிறுவியவர் (அப்போது இந்தியாவில் 10 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருந்தன). மேற்குலக நாகரீகத்தின் தூண்களில் ஒருவராக அறியப்பட்டவர் பிளேட்டோ.

பிளேட்டோ வாழ்ந்தது 427 -348 BCE என்கிறார்கள். செல்வச் செழிப்புள்ள பிரபுக்கள்

Plato with Aristotle

குடும்பத்தில் பிறந்தவர். சாக்ரடீஸைக் குருநாதராகக் கொண்டவர். அரிஸ்டாட்டில் இவரது சீடர்.

அவரது கருத்துக்கள் 'பிளேட்டோனிக் ஐடியலிசம்' (Platonic Idealism) என்று அழைக்கப்படுகிறது. "Theory of Forms" or " Doctrine of Ideas" என்றும் குறிப்பிடுகிறார்கள். இதில் வலியுறுத்தப்படும் கருத்து, ' நாம் காணும் இந்த பொருள் சார்ந்த உலகம் உண்மையானது இல்லை. (எல்லாம் மாயை) . மெய்ப்பொருள் கருத்துலகில் மட்டுமே உள்ளது' என்பதே.

கிறிஸ்தவ வேத சாஸ்திரமே பிளேட்டோவின் கருத்தியலால் உருவாக்கப்பட்டது. (Neo-Platonism). அந்த அளவிற்கு பேச்சு, எழுத்து, விவாதங்களின் மூலமாக மேற்குலகின் தத்துவ இயலைக் கட்டமைத்தார்.

அவர் 33 புத்தகங்கள், 13 கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் "த ரிபப்ளிக்"(The Republic) முக்கியத்துவம் வாய்ந்தது. குடியாட்சி, அரசின் கொள்கைகள், மக்களின் நலன் அனைத்தையும் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் (சாணக்கிய நீதி போன்று). ஏதென்ஸ் அப்போதே குடியரசாக இருந்தது.

'The Apology of Socrates' "Great dialogues of Plato" என்ற இரு புத்தகங்களிலும் தன் குருநாதர் சாக்ரடீஸை முக்கிய பாத்திரமாக்கி அவரது தத்துவங்களைப் பரவச் செய்தார். பிளேட்டோவின் முக்கிய நூல்களில் சில - 'The Symposium' 'The Allegory of the Cave'

பிளேட்டோவின் தத்துவங்களில் வாழ்க்கை பாடங்கள்

உன்னை வெற்றி கொள்! ( Conquer Yourself)

"The first and Greatest victory is to conquer yourself. To be conquered by yourself is of all things, shameful and vile"

தன்னை வெல்லாமல் (கட்டுப்படுத்த முடியாமல்) இருப்பது வெட்கக்கேடானது: வெறுக்கத்தக்கது. உன்னை வெல்ல உன் உள்ளுணர்வுகளும், ஆசைகளும் உனது செயல்களைத் தீர்மானிக்க விடக்கூடாது. எல்லோருமே ஆசைகளால் தூண்டப்பட்டு இயங்குகிறோம்: ஆராய்ந்து அறியும் திறனால் அல்ல. அதனால் தற்காலிக சந்தோஷங்களுக்காக தவறான, முரண்பாடான முடிவுகளை எடுக்கிறீர்கள். இதுவே உனது எதிர்காலத்தை பாதிக்கிறது.

எந்த ஒரு செயலையும் செய்யுமுன், அது உனக்கோ, உன்னைச் சார்ந்தவர்களுக்கோ நன்மை தரக்கூடியதா என ஆராய வேண்டும். உன்னிடம் உள்ள தீய பழக்கங்களைக் கைவிட வேண்டும். அப்போதுதான் உன்னை வென்றவனாகிறாய். எதைச் செய்தாலும், ஒரு திட்டம் உருவாக்கி, அலசி ஆராய்ந்து, அதை ந்டைமுறைப்படுத்தினால் உன்னை வெல்லலாம்.

(புகை, மது போன்ற போதைப் பழக்கங்களை விட 'Cold Turkey Method' என்று ஒரு  Quick fix method உண்டு. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?)

கோபம் எதற்கும் தீர்வாகாது! (Being Angry, Solves nothing)

"Two things, a person should never be angry at: 1. What they can help 2. What they cannot help"

கோபம் ஒரு எதிர்மறை உணர்வு. அது உன்னுடைய உறவுகளை அழிக்கக் கூடியது. மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்து நிலைமையை ஆராய வேண்டும். வாழ்க்கையில் இரண்டு வகையான சிக்கல்களே உள்ளன. 1. உன்னால் தீர்க்கக் கூடியவை 2. தீர்வு உன் கையில் இல்லாதவை. முதலாவதை திட்டமிட்டு அகற்று. இரண்டாவது வகை சிக்கல்களுக்கு, நீ கவலைப்பட வேண்டியதில்லை. அது தானே ஒருநாள் முடிவுக்கு வரும். அது வரை அதை மறந்து, அல்லது அதனுடன் வாழப்பழகு.

சிக்கல்களுக்காக கோபப்படுவதில் அர்த்தமில்லை. பகுத்தறியும் குணம் இருந்தால் கோபம் வராது.

உனக்கான மனிதர்களை விவேகத்தோடு தேர்வு செய் ( Choose the people, you spend time with wisely)

" People are like Dirt. They can either nourish you and help you grow or they can stunt your growth and make you wilt and die"

ஒரு நல்ல நண்பனோ, கூட்டாளியோ நீ வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை அடைய உதவக்கூடும். அதேபோல, மோசமான நண்பனால், கூட்டாளியால் உனது வாழ்க்கையே அழியக் கூடும்.

உனது உறவுகளை, நாம் பணிபுரியும் இடத்தில், சக பணியாளர்களை நீங்கள் தீர்மானிக்க முடியாது. பல நேரங்களில் அவர்களிடத்து நீங்கள் அதிகாரம் செலுத்தவும் முடியாது. அவர்களின் குணநலன்களைப் பொறுத்து, அவர்களை சரியான தூரத்தில் வைக்கவேண்டும்.

ஒரு நல்ல முதலாளி கிடைத்தால், உன் திறமைகளை மெருகேற்ற முடியும். உனது வாழ்வை வளமாக்க முடியும். அதுவே மோசமான முதலாளி, உன் தன்னம்பிக்கையை சீர்குலைப்பார். உன் வேலை நிச்சயமில்லாததாக இருக்கும். உன் மரியாதை பாதிக்கப்படும்.

ஒரு நல்ல வாழ்க்கைத் துணை உன் எண்ணங்களை அழகாக்குவார். உன் மனதில் காதலும், சந்தோஷமும் நிறைந்திருக்க செய்வார். ஆனால் மோசமான வாழ்க்கைத் துணையால் மனநிம்மதி போகும். வாழ்க்கையே நரகமாகும்.

எனவே நல்ல உறவுகளால் வாழ்க்கை அமைதியாக, கௌரவமானதாக இருக்கும். நீயும் நல்ல உறவாக, நண்பனாக இருக்க வேண்டும்.

உனது துணையைத் தேடு (Find your Other half)

" Each of Us, then a 'Matching Half' of a human whole. And each of us always seeking the half that matches him"


கிரேக்க புராணத்தின்படி, மனிதன் படைக்கப்பட்டபோது, அவனுக்கு நான்கு கால்கள், நான்கு கைகள், இரண்டு முகம் கொண்ட தலை, கோள வடிவத்தோடு, பாலுணர்வு இல்லாதவர்களாக இருந்தனர். ஆண்ட்ரோகைனஸ் (Androgynous) என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் மிகுந்த பலம் பொருந்தியவர்களாக இருந்தனர். அதனால், ஜீயஸ் (Zeus) கடவுள் அவர்கள் பலத்தைக் குறைக்க, இரண்டாக வெட்டினார். மனிதன் இப்போதுள்ள மாதிரி வடிவம் ஆனான். ஆனால்,

தன்னில் பாதியை இழந்த உணர்வு போகவில்லை. எனவே இழந்த பாதியை தேடிக்கொண்டே இருக்கிறான் என்பது கிரேக்க மரபு. பிளேட்டோ அதை ஆத்ம துணையை (Soul mate) என்று குறிப்பிட்டார்.

நகைச்சுவையின் தந்தை என அழைக்கப்பட்ட 'அரிஸ்டோபேன்ஸ்' (Aristophanes - Father of Comedy) பிளேட்டோவின் சிம்போசியத்தில், " அது வெறும் உடல் தேவை மட்டுமல்ல, முழுமையடைவதற்கான முயற்சி" என்றார். 

அதனால், அந்தக் காலத்தில், ஓரினச் சேர்க்கை அங்கீகரிக்கப்பட்டது.

நட்பு, கருணை, அமைதி, மரியாதை, ஒரே மாதிரியான வாழ்க்கை நோக்கங்களைக் கொண்ட தனது பாதியை மனிதன் தேடிக் கொண்டே இருக்கிறான் என்றார் பிளேட்டோ.

அரசியல் பழகு (Get involved in Politics)

"One of the penalties for refusing to participate in politics is that you end up being governed by your inferiors"

உலகின் முதல் ஜனநாயக நாடு ஏதென்ஸ். ஆனால் பிளேட்டோவிற்கு மக்களாட்சி மீது வெறுப்பு அதிகம். அதுவும் அவ்ரது குரு சாக்ரடீஸ் மரணத்தால் மிகவும் துயருற்றார். தத்துவ இயலுக்கு ஜனநாயகம் எதிரானது என்றார். தனது உரைகளில் ஜனநாயகத்திற்கெதிரான கருத்துக்களைக் கூறினார். 

(அதனால், ஒரு கட்டத்தில் சாக்ரடீஸைப் போல கைது செய்யப்பட்டு கொல்லப்படுவோம் என நாட்டை விட்டே வெளியேறினார். 12 ஆண்டுகள் எகிப்து, இத்தாலி, இந்தியா என சுற்றித் திரிந்தார். பிறகு நாடு திரும்பி ' அகாடமி'(Academy) என்ற அமைப்பைத் தொடங்கினார். பிறகு பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார்.)

" ஒரு கப்பலைக் கற்பனை செய்யுங்கள். அதன் உரிமையாளர் வலுவானவர், ஆனால் அவருக்கு அந்தக் கப்பலை இயக்கத் தெரியாது. அதன் தளத்தில் உள்ளவர்கள், தங்களுக்கு இயக்க தெரியாதெனினும், தான் தான் கேப்டனாக இருப்பேன் என்று சண்டையிடுகின்றனர். ஒருவருக்கு மட்டும் கப்பலை இயக்கவும், அதை செலுத்தும் திசைகளும் தெரியம். அவருக்கு தலைமையில் ஆசையுமில்லை. இவர்கள் போடும் ச்ண்டையைப் பார்த்து அமைதியாக ஒதுங்கிக் கொள்கிறார். இதில் உரிமையாளர்- மக்கள், போட்டியிடுவோர்- அரசியல்வாதிகள், அனைத்தும் தெரிந்தவர் - தத்துவஞானி." இதுதான் ஜனநாயகம் பற்றி பிளேட்டோவின் விளக்கம்.

ஜனநாயகத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்புக்கள் வழங்கப்படுகிறது; அறிவும், திறமையும் உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும். அதனால் மோசமான தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நாட்டை நிர்வகிக்கத் தெரியாமல், நாட்டைப் பாழ்படுத்துகின்றனர்.

படிப்பறிவில்லதவர்களின் கருத்தும், படித்த அறிவாளிகளின் கருத்தும் ஒன்றாகப் பாவிக்கப்படுகிறது. இதனால் பெரும்பான்மையான படிக்காதவர்களின் கருத்தே வெற்றி பெருகிறது. முக்கிய அதிகாரங்களும் பதவிகளும் அவர்களுக்கே சேர்கிறது என்றார் பிளேட்டோ. எனவே படித்தவர்கள், திறமையானவர்கள் அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தைப் பிடிக்கவேண்டும் என்றார்.

அன்றைய ஜனநாயகம் வேறு மாதிரி இருந்தாலும், அவரது கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்துகின்றன.

நல்ல தொண்டனே நல்ல தலைவனாக முடியும் (Learn to be a Follower, then a Master)

"He who is not a good servant, will not be a Good master." 

"To be a Great Teacher, you first need to be a Great Student"

அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இருந்தால்தான் தலைமைப் பதவிகளை அடைய முடியும். தலைவர்களாக விரும்புபவர்கள் மக்களிடத்தே தனது அறிவு, திறமைகளை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு தலைவர்களானவர்களால்தான்  சமத்துவ சமுதாயத்தில் (Egalitarian) ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்க முடியும். 

ஆனால், அறிவோ, திறமையோ, அனுபவமோ இல்லாதவர்கள்தான் பெரும்பாலும் தலைவர்களாகிறார்கள்.

எனவே நல்ல தலைவர்களாக நல்ல தொண்டர்களாக இருங்கள்.

எளிய வாழ்விலே திருப்தியடையுங்கள் ( Be Content with Little)

" The Greatest Wealth is to live content with little"

"தலைக்கு மேல் ஒரு கூரை, உண்ண உணவு, வாழ ஒரு கௌரவமான வேலை"- இவற்றைப் பெற்றாலே சந்தோஷமாக வாழமுடியும். அதிகமான வசதிகளுக்கு ஆசைப்பட்டே சந்தோஷத்தை இழக்கிறீர்கள்.

மிக வசதியான பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த பிளேட்டோவிற்கு எளிமையான வாழ்வே மனநிறைவைத் தந்ததாகக் குறிப்பிடுகிறார்.

எளிய வாழ்வில் சந்தோஷப்படுவதோடு, உனக்கு கிடைத்தவற்றிற்கு நன்றி செலுத்து. நன்றியுணர்வு இருந்தால் மேலும் மகிழ்ச்சி பெருகும்.

பணக்காரர்களைக் கண்டு பொறாமையோ, அதிருப்தியோ அடையாதீர்கள். 

உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்களே பொறுப்பு (Be incharge of your own happiness)

"The man who makes everything, that leads to happiness depend upon himself, and not upon other men, has adopted the best plan for living happily"

பிளேட்டோ வாழ்க்கையை உல்லாசமாகக் கழிக்க விரும்பவில்லை (not a Hedonist). அவர் வாழ்வின் சாரங்களையும், உண்மைகளையும், ஞானத்தையும் அடைய கடினமாக உழைத்தார்.

ஒவ்வொருவருக்கும் சந்தோஷம் மற்றவர்களால் வருவதில்லை. அவர்களது செயல்களாலேயே வருகிறது. 

வசதிகளாலும், புகழாலும் சந்தோஷம் கிடைக்கும் என்று நினைத்தால், நீங்கள் அவற்றை அடைய முடியாதோ என்ற பயத்திலும், அன்பானவர்களை இழந்து விடுவோமோ என்ற பயத்திலும் வாழ வேண்டியிருக்கும். பொருள் மோகத்தில் சந்தோஷங்களை இழந்துவிடுவீர்கள். உயர்வு, தாழ்வு கொண்டதுதான் வாழ்க்கை.

அமைதியான, சந்தோஷமான வாழ்க்கை வாழுங்கள். உங்களுக்கு சந்தோஷம் தரும் செயல்களையே செய்யுங்கள். உங்களைச் சார்ந்தவர்களையும் சந்தோஷப்படுத்துங்கள்.

FAMOUS QUOTES OF PLATO

' Wise men speak because they have something to say;
Fools, because they have to say something'

Ignorance - the root and stem of every evil.

The madness of love is the greatest of heaven's blessings.

Human behaviour flows from three main sources: Desire, Emotion and Knowledge.

There are three classes of men; Lovers of Wisdom, Lovers of Honour and Lovers of Gain.

Courage is knowing what not to fear.

The Beginning is the most important part of work.

Charcter is simply habit long continued.

Necessity is the mother of Invention.

Beauty lies in the eyes of the beholder.

Good actions give strength to ourselves and inspire good actions to others.

An empty vessel makes the loudest sound; so they that have the least wit are the greatest babblers.













கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காதல் காதல் காதல்

  காதல் - ஒரு பார்வை "காதல் காதல் காதல் காதல் போயின்  சாதல் சாதல் சாதல்" - குயில் பாட்டில் பாரதியார். கண்டிப்பாக காதல் இல்லையேல் மனித இனமே அழிந்திருக்கும். காதலிக்காதவர், காதல் உணர்வு கொள்ளாதவர், காதலைப் பிடிக்காதவர் யார்தான் உண்டு? நினைக்கும்போதே இனிமையைத் தருவதில் காதலுக்கு ஈடுண்டோ? சற்று நேரம் காதலைச் சுவாசித்தாலே கவலைகள் மறந்து போகும். உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அந்தக் காதலைப் பற்றிய சில அலசல்களே இந்தக் கட்டுரை. கிரேக்கர்கள் காதலை 8 வகையாகப் பிரிக்கின்றனர். அதை பிறகு பார்ப்போம்.  எனது பார்வையில் அவர்கள் பெயர் வைத்தபடி, காதல் உறவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  1. பிளேட்டானிக் உறவு (Platonic Relationship) - அறிவுசார்ந்த சுத்தமான நட்பு. காம இச்சைகளுக்கு இடமில்லை. உடல் சார்ந்த கவர்ச்சி இல்லாதது. (Spritual, Intellectual Relationships). பேச்சிலும், கருத்திலும் மட்டுமே மனம் மயங்கும். அறிவு சார்ந்ததால்தான் பிளேட்டோவின் பெயரில் அழைக்கப்படுகிறது. 2. ஈராஸ் உறவு (Eros Relationship)- பார்க்கும்போது தலை முதல் கால் வரை 'ஜிவ்' வென்ற உணர்வு; பார்க்கவிட்டாலோ கனவுலகில் கற்பன...

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....