பேரெட்டோவின் கோட்பாடு 80/20 விதி என்றால் என்ன? "80 சதவீத பலன்களைத் தருவது 20 சதவீத செயல்களே!" (80% of the Effects Caused by 20% of the Causes) அல்லது 80% விளைவுகளுக்குக் காரணம் 20% முயற்சிகளே! இதைச் சொன்னவர் வில்பிரடோ பேரெட்டோ (1848 - 1923) என்ற இத்தாலிய பொருளாதார வல்லுநர். அவர் அடிப்படையில் சிவில் இன்ஜினியர். மேலும் பொதுவுடைமைவாதி (Socialist), அரசியல் விஞ்ஞானி, தத்துவஞானி என்று பன்முகங்களைக் கொண்டவர். இத்தாலிய ரயில்வேயில் பணியமர்ந்து, பின் இத்தாலிய இரும்பு ஆலைகளில் உயர் பதவிகள் வகித்தவர். பொதுவுடைமைவாதியாக இருந்த அவர், பிற்காலத்தில்தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களால் மனம் நொந்து, அதற்கு எதிரான பாசிசக் கொள்கைகளை ஆதரிப்பவராக அறியப்பட்டார். பேரெட்டோ, சமூகப் பொருளாதாரம், நுண்பொருளாதாரம் (Micro Economics), கணிதம் அனைத்திலும் ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு கொள்கைகளை வழங்கினார். அதுவே பேரெட்டோ திறன் (Pareto Efficiency) என்று பல்வேறு துறைகளை மேம்படுத்த உதவியது. முதலில் அவர் கண்டறிந்து கூறிய ' இத்தாலியின் 80% சொத்துக்கள் 20% மக்களிடமே உள்ளது ' என்...
ராஜசேகரின் நண்பர்களுக்கான பதிவுகள்..