பேரெட்டோவின் கோட்பாடு
80/20 விதி என்றால் என்ன?
"80 சதவீத பலன்களைத் தருவது 20 சதவீத செயல்களே!" (80% of the Effects Caused by 20% of the Causes) அல்லது 80% விளைவுகளுக்குக் காரணம் 20% முயற்சிகளே!
இதைச் சொன்னவர் வில்பிரடோ பேரெட்டோ (1848 - 1923) என்ற இத்தாலிய பொருளாதார வல்லுநர். அவர் அடிப்படையில் சிவில் இன்ஜினியர். மேலும் பொதுவுடைமைவாதி (Socialist), அரசியல் விஞ்ஞானி, தத்துவஞானி என்று பன்முகங்களைக் கொண்டவர். இத்தாலிய ரயில்வேயில் பணியமர்ந்து, பின் இத்தாலிய இரும்பு ஆலைகளில் உயர் பதவிகள் வகித்தவர். பொதுவுடைமைவாதியாக இருந்த அவர், பிற்காலத்தில்தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களால் மனம் நொந்து, அதற்கு எதிரான பாசிசக் கொள்கைகளை ஆதரிப்பவராக அறியப்பட்டார்.
பேரெட்டோ, சமூகப் பொருளாதாரம், நுண்பொருளாதாரம் (Micro Economics), கணிதம் அனைத்திலும் ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு கொள்கைகளை வழங்கினார். அதுவே பேரெட்டோ திறன் (Pareto Efficiency) என்று பல்வேறு துறைகளை மேம்படுத்த உதவியது.
முதலில் அவர் கண்டறிந்து கூறிய ' இத்தாலியின் 80% சொத்துக்கள் 20% மக்களிடமே உள்ளது' என்பது பேரெட்டோவின் கோட்பாடு என அழைக்கப்பட்டது. அந்த 80/20 விகிதாச்சாரம் பிரபலமானது. அது அனைத்து துறைகளிலும் காணப்பட்டது.
சமுதாயத்தில் 80 % நிதி வளங்களை 20% மக்களே அனுபவிக்கின்றனர். அவர்களே அரசியலமைப்பிலும், அனைத்து துறைகளுலும் அதிகாரமிக்கவர்களாக உள்ளனர். இன்றுவரை அதே நிலைதான் உலகமெங்கும்.
பணியிடங்களில் பேரெட்டோவின் கொள்கை
- 80% பணிகளை 20% பணியாளர்களே முடிக்கின்றனர். அதிலும் 80% பணிகளை 20% முயற்சியிலேயே முடித்துவிடுகின்றனர்.
- பணியிடங்களில் 80% அரசியல் செய்வது 20% பணியாளர்களே.
- 80% தவறுகள் 20% பணியாளர்களின் கவனக் குறைவே
- 80% விபத்துகள் 20% பாதுகாப்பு நடவடிக்கைகளால் தவிர்க்கப்படுகின்றன.
விற்பனைத் துறையில் பேரெட்டோவின் கொள்கை
- 80% விற்பனை 20% பிரதிநிதிகளால் செய்யப்படுகிறது.
- பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் ஒரு கம்பெனியில் 80% இலாபத்தை 20% பொருட்களே தருகின்றன.
- 80% பொருட்களை 20% நுகர்வோரே வாங்குகின்றனர்.
- 80% புகார்கள் 20% நுகர்வோரிடமிருந்தே வருகின்றன.
மென்பொருள் துறையில் பேரெட்டோவின் கொள்கை
- மைக்ரோசாப்ட், 80% பிழைகள் 20% கோடிங்கில் இருந்ததாக கண்டறிந்தனர். 20% முக்கிய பிழைகளை சரிசெய்ததில் 80% புகார்கள் குறைந்தன.
- 20% பணியாளர்களுக்கு பயிற்சியளித்ததில் நிறுவனத்தின் 80% திறன் மேம்பட்டது.
மற்ற துறைகளில்
- நாட்டில் 80% குற்றங்கள் 20% கிரிமினல்களால் செய்யப்படுகிறது
- 80% சாலை விபத்துக்கள் 20% ஓட்டுனர்களால் ஏற்படுகிறது
- 80% மாசு 20% ஆலைகளால் வருகிறது
- உங்கள் தின செயல்களை, நடவடிக்கைகளைப் பட்டியலிடுங்கள்
- அவற்றில் முக்கியமானவற்றைக் கண்டறியுங்கள்
- எவை எவை எவ்வளவு பலன் கொடுக்கின்றன என்பதைக் குறியுங்கள்
- குறைந்த பலன் தரும் செயல்களைக் குறைக்கவோ, மாற்றவோ முடியுமா என்று அலசி ஆராயுங்கள்
- அதிக பலனைத் தரக்கூடிய மதிப்பு மிக்க செயல்களை அதிகரிக்கத் திட்டமிடுங்கள்
- இப்போது 80 / 20 விதி மூலம் தரம் பிரித்து முன்னுரிமை அளிக்கவேண்டிய செயல்களைக் கண்டறிந்து அவற்றில் முதலில் கவனம் செலுத்தி முழு சக்தியையும் பிரயோகியுங்கள் .பேரெட்டோ விதியின் மூலம் பலனடையுங்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக