முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நல்ல பெண்மணி

 நல்ல பெண்மணி 

இது பேஸ்புக் ல வந்தது.. படித்ததில் பிடித்தது

நிறைய பொண்ணுங்க உண்டு இந்த உலகத்துல..

அதுல ஒருத்தி மட்டும் நம்ம கண்ணுக்கு தனிச்சு தெரிவா..

அவ என்ன சொன்னாலும் பிடிக்கும்,

எது பேசினாலும் பிடிக்கும்,

பார்த்துட்டே இருக்கலாம்னு தோணும்,

கருவறையில் மட்டும் அவ நம்மளை சுமக்க மாட்டா அவ்வளவு தான்.

 ஆனா மத்தப்படி எல்லாத்தையும் நமக்காக பொறுத்து, நம்ம செய்யற அத்தனையும் சகிச்சிட்டு, நம்மையும் தூக்கி திரிந்துட்டு இருப்பா..

 சாப்பிட்டியா

என்ன பண்றே

 பைக் பார்த்து கவனமா ஓட்டு

உடம்பை கவனிச்சிக்கன்னு அன்பினாலையே அதட்டி எடுப்பா.. கோவமெல்லாம் அக்கறைன்னு புரியவைப்பா..

கத்தறதெல்லாம் பாசம்ன்னு தெரியவைப்பா..

சண்டையெல்லாம் எதிர்காலம்ன்னு அறியவைப்பா..

பல காயங்களுக்கு மருந்து போடுவா, சில காயங்களுக்கு அவளே காரணமாவா..

இந்த நிமிஷம் உன்னை அவ்வளவு பிடிக்குது ன்னு சொல்வா..

அடுத்த நிமிஷமே உன்னை போல யாரும் என்னை இந்தளவு அழ வைச்சது இல்லைன்னு புலம்புவா..

ஒரு பெரிய மனக்கஷ்டத்தை தூக்கிட்டு திரியும் போது இதெல்லாம் பிரச்சனையா ன்னு அதை தன்னுடைய தலையில தூக்கி வச்சிப்பா..

தாயா இருப்பா

புள்ளையா இருப்பா

டீச்சரா இருப்பா

வழிகாட்டியா இருப்பா

எல்லாமுமா இருப்பா...

காதலே தராத மகிழ்வு ஒன்னு இந்த உலகத்துல இருக்குதுன்னா அது அவ தான்...

அவளை போல இருக்கிற தேவதைகளை எல்லாம் இறுக்க பிடிச்சு வச்சிக்கங்க.

 எந்த சமயத்திலும் எவனுக்காகவும் எவளுக்காகவும் விட்டு தந்துடாதீங்க.

அவகிட்ட உங்க வாழ்க்கையை கொடுத்துட்டு பேசாம இருங்க அவ பார்த்துக்குவா...

காதலுடன்

 💜💜💜FB


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

எங்கே செல்லும் இந்தப்பாதை?

  எங்கே செல்கிறேன்? எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை. (டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம்  மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected. இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan) ', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...