முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“ஓய், ஓய்வெடுக்க ஆராய்ச்சி பண்ணுறீங்களா?”

 ஓய், ஓய்வெடுக்க ஆராய்ச்சி பண்ணுறீங்களா?”

எடுங்கள் 7 வகை ஓய்வு - வெளிச்சம் பிடிச்சவங்களுக்கு!

சொல்லுங்க பாஸ், எப்போதும் டென்ஷனா இருக்கிறீங்களா? இதோ உங்களுக்கான மருந்து!

வேலை, வீடு, குடும்பம், சமூகம்... அடடா, நம்ம லைஃப்லே எங்க ஓய்வு? "அட ஓய்வுன்னா தூக்கம்தானே?" என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் முற்றிலும் தவறாக நினைக்கிறீர்கள்!

உண்மையில் ஓய்வு என்பது 7 வகை இருக்கு. ஆம், நீங்கள் சரியாகவே கேட்டீர்கள் - 7 வகை! இதோ பாருங்க:

1. உடல் ஓய்வு (Physical Rest) 🛌

அறிகுறிகள்:

·        உடல் சோர்வா இருக்கா? எனர்ஜி இல்லையா?

·        தசைகள் புலம்புற மாதிரி இருக்கா?

·        அடிக்கடி தலைவலி உடல் வலி வருதா?

   அப்போ இதை செய்யுங்க

  • செயலற்ற ஓய்வு: தினமும் 7+ மணி நேரம் தூங்குங்க, தேவைப்பட்டால் பகலில் கொஞ்சம் உறங்குங்க
  • செயலில் ஓய்வு: மூச்சுப்பயிற்சி, யோகா, மசாஜ் செய்யலாமே!


2. மன ஓய்வு (Mental Rest) 🧠

அறிகுறிகள்:

·        மனம் எப்போதாவது கவலைக் கடலில் மூழ்குதா? மன சோர்வா?

·        வாழ்க்கை ஏன் சுவையில்ல,  போரடிக்குதுன்னு தோணுதா?

·        எதுக்கெடுத்தாலும் கோபம் வருதா? எரிச்சல் ஆகுறீங்களா?


இது தான் சமயம் ஓய்வெடுக்க!

·        வேலையில் கவனச்சிதறல் இல்லாத நேரம் ஒதுக்குங்க

·        மன அமைதி தரும் இசை கேளுங்க

·        மனசுக்கும் ரிலாக்ஸ் வேணும்! தியானம் பழகுங்க.

 

3. உணர்வு ஓய்வு (Emotional Rest) 💙

அறிகுறிகள்: 

·        சுகமோ துக்கமோ அதிகமா தாக்குதா?

·        பாதுகாப்பின்மையாக உணர்கிறீர்களா? உங்கள் பலத்தின் மேல் நம்பிக்கை குறைகிறதா?

·        மற்றவர்களின் மேல் வெறுப்பு வருகிறதா?

அப்போ இதை செய்யுங்க

·        மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டு பார்க்கிறத நிறுத்துங்க!

·        நம் எண்ணங்களுக்கு எப்பவும் எதிரா பேசுற ஆட்களை தவிருங்கள்; அவர்களிடம் விவாதிக்காதீர்கள்!

·        எதுக்கு பயமடா சாமி?’ – மனசைக் கேளுங்க! 'அச்சம் என்பது மடமையடா' – சொல்லுங்க!

 

4. சமூக ஓய்வு (Social Rest) 👥

அறிகுறிகள்: 

  •        மனம் தனிமையை நாடுதா?
  •         குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் தள்ளி இருக்கிறீர்களா?
  •         அறுவை ஆசாமிகள் உங்கள் திறன்களை உபயோகமில்லாமல் செய்கிறார்களா?

அப்போ இதை செய்யுங்க

·        யாராக இருந்தாலும், சில நேரம் "சமூக தொந்தரவு" விட்டு ஓடணும்!

·        உங்களுக்கு பிடித்த நபர்களை தேடி போய் பேசுங்க.

  • உங்களை drain பண்ணும் நபர்களிடமிருந்து இடைவெளி விடுங்க!
  •   பொது ஆர்வமுள்ள குழுக்களில் சேருங்க. சங்கங்கள், கிளப்கள்ல சேர்ந்து பணியாற்றுங்கள்

 

5. ஆன்மீக ஓய்வு (Spiritual Rest) 🙏

அறிகுறிகள்: 

  •        வாழ்க்கையில் திருப்தி இல்லையா?
  •        உங்கள் மேல் நம்பிக்கையின்மையா? 
  •        உங்களுக்கு உந்துதல் கிடைக்கவில்லையா? 

அப்போ இதை செய்யுங்க

  • தினமும் நன்றி சொல்லும் பழக்கம் வளர்த்துக் கொள்ளுங்க!
  • மெளனமாக அமர்ந்து, மூச்சை கணக்கிட்டு பாருங்க

·        மத சேவைகளில் பங்கேற்பு. உங்கள் மத தலங்களுக்கு சென்று வாருங்கள்!

 

6. புலன் ஓய்வு (Sensory Rest) 👀

அறிகுறிகள்:

·        கண்கள்தயவு செஞ்சு விடுப்பான்னு சொல்றதா?

·        சுவை மணம் கூட  உணர முடியலையா, எதுவும் பிடிக்கலையா?

·        அதிக சத்தங்கள் தொந்தரவு செய்கிறதா?

 

அப்போ இதை செய்யுங்க

·        எல்லா ஸ்கிரீன்- இருந்தும் விலகுங்க

·        தொந்தரவு செய்யும் விஷயங்களை மாற்றுங்க (volume குறை, light dim பண்ணு)

·        கண்களை மூடி ஒரு நிமிடம் ரிலாக்ஸ்

 

7. படைப்பு ஓய்வு (Creative Rest) 🎨

அறிகுறிகள்:

  •         வேலையை தவிர நேரமே கிடைக்கவில்லையா?
  •         இயற்கையை ரசிக்க மனமில்லையா?
  •        புதிய சிந்தனைகளை மனதில் விதைக்க முடியவில்லையா (brainstorming)

 

அப்போ இதை செய்யுங்க

·        வேலையின் இடையே சிறிய 15 நிமிட இடைவெளிகள், வருடாந்தர விடுமுறைகள் - 15 நாட்களாவது எடுங்க

·        வேலைகளை, கவலைகளை மறந்து கட்டுப்பாடின்றி வெளியில் நேரம் செலவிடுங்க

·        நடனம், இசை படிப்பு, புதிய கலைகளை பயிலுங்கள்

 

முடிவுரை

நண்பர்களே, இந்த 7 வகை ஓய்வையும் சரியான விகிதத்தில் எடுத்துக்கொண்டால், உங்கள் வாழ்க்கை ஒரு சூப்பர் ஹிட் படம் மாதிரி இருக்கும்!

"All work and no play makes Jack a dull boy" - ஆனால் "All types of rest makes you the best!" 😉

மனமும் உடலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம்மால் எதையும் சாதிக்க முடியும். எனவே இந்த ஓய்வு வகைகளை உங்கள் வாழ்க்கையில் அமல்படுத்தி பாருங்கள்!

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

எங்கே செல்லும் இந்தப்பாதை?

  எங்கே செல்கிறேன்? எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை. (டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம்  மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected. இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan) ', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...