ஊசிமுனையில் தவம் இருந்தாலும் உன்னதுதான் கிட்டும்!
சுய முன்னேற்றப் புத்தகங்கள் - ஒரு பார்வை - 6
இந்தக் கட்டுரையில் இன்னும் சில புத்தகங்களைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.
The 5 Second Rule - Mel Robbins (தமிழில் இல்லை)
'5 விநாடி விதி' என்ற இந்த புத்தகம் 'மெல் ராபின்ஸ்' என்ற அமெரிக்க பெண்மணியால் 2017 ல் எழுதப்பட்டது. 52 வயதாகும் இவர் டி.வி நிகழ்ச்சிதொகுப்பாளராகவும், ஊக்குவிக்கும் பேச்சாளராகவும் (Motivational Speaker) உள்ளார். TED x Talkல் இவரது உரைகள் பிரபலம். You Tube லும் உண்டு.
மெல், 41வது வயதில் வாழ்க்கையின் சிக்கலான நிலையில் இருந்திருக்கிறார். வேலை இல்லை. கணவருக்கு ஹோட்டல் தொழிலில் நஷ்டம். பணப் பிரச்னை. மெல், மதுவுக்கு அடிமையாகி, படுக்கையை விட்டு எழுந்திருக்கவே ' ஏன் விடிகிறது' என்ற மன உளைச்சல். எப்படி இதிலிருந்து விடுபடுவது என்ற தீவிர சிந்தனை. ஒரு நாள் இரவு நாசா ராக்கெட் ஏவுவதை டி,வி.யில் பார்க்கிறார். அதில் வரும் இறுதி கவுண்ட் டவுன் இவர் மனதில் பொறி தட்டுகிறது. சோம்பிக் கிடப்பதை விட்டு விட்டு எழ, அதே கவுண்ட் டவுனை உபயோகிக்கிறார். வாழ்க்கை மாறுகிறது. சி.என்.என் ( CNN) ல் வேலை கிடைக்கிறது. அந்த யோசனையையே புத்தகமாக எழுதுகிறார். பிரபலமாகிவிட்டார். அதுதான் 5 விநாடி விதி.
அது என்ன 5 விநாடி விதி?
"நீங்கள் ஒரு செயலை செய்ய நினைத்தால் நினைத்த 5 நொடிக்குள் அதை செயல்படுத்தத் தொடங்க வேண்டும். வேண்டும்.இல்லையேல் உங்கள் மூளை அதை செய்ய தடை போட்டுவிடும்.
எனவே நினைத்த மாத்திரத்தில், 5,4,3,2,1 GO என்று செயல்பட்டுவிடுங்கள்."
கொஞ்சம் விளக்கம் வேண்டுமா?
நமது மனத்திற்கு அல்லது மூளைக்கு ஒரு குணாதிசயம் உண்டு. அது எதிர்மறைசிந்தனை. ஒரு செயலை செய்ய நாம் நினைத்தால், மூளை உடனே சுகமான பகுதிக்கு(Comfort Zone) நம்மை இழுக்கும் (autopilot mode). அதை இப்போது செய்யாவிட்டால் என்ன? செய்தால் உடல் நோகுமோ? தோல்வியில் முடியுமோ? போன்ற எதிர்மறை சிந்தனைகளை உருவாக்கி தள்ளிப் போட வைக்கும்.(Procrastination). அதை எதிர்த்து செயல்பட நமக்கு இருப்பது 5 நொடிகள்தான். எனவே கவுண்ட் டவுன் 5,4,3,2,1, போ சொல்லி செயல்பட்டுவிடவேண்டும்.
உளவியலில் மெடாகாக்னிஷன் (Metacognition) என்பார்கள். (Thinking about thinking). அதைப் போன்ற கருத்து இது.
நாம் நம் மனதை நம்மால் முடியும் என நம்பவைத்து, உடனே செயலில் இறங்குவது. இதை 2 விதமான Locus of Control உள்ளது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
வெற்றியாளர்கள் 'Internal Locus of Control ' உடையவர்கள். என்னால் முடியும். கடின உழைப்பை கொடுத்தாவது முடிப்பேன் என்பவர்கள்.
தோல்வியாளர்கள், 'External Locus of Control ' உடையவர்கள். நேரம் சரியில்லை, வாய்ப்பு கிடைக்கவில்லை, நண்பர்கள் சரியில்லை போன்ற காரணங்களை சொல்லி, எளிமையான பணிகளைமட்டும் செய்வார்கள்.
"The more that you believe you are in control of your life, your actions and your future - the happier you'll be."
ஏன் கவுண்ட் டவுன்?
5,4,3,2,1 என்று 1ஐ முடிக்கும்போது மூளை ஏதோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்க்கும். உதாரணத்திற்கு மெல், தனது போதைப் பழக்கத்தை மாற்ற, ஒயின் பாட்டில், கிளாஸ் எடுத்து வைத்துக் கொண்டு, கவுண்ட் டவுன் சொல்வாராம். 1 என்றவுடன் அனைத்தையும் எடுத்து வைத்து மூடிவிடுவாராம். இதை அடிக்கடி செய்ய, அந்த பழக்கத்திலிருந்து விடுபட்டாராம். ஒரு நல்ல பழ்க்கத்தை ஆரம்பிக்கவும் இது மிக உபயோகமாக இருக்கும் என்கிறார்.
அறிவிலிருந்து செயலுக்கு --1. சிந்தி 2. நகரு 3. செயல்படு
Knowledge to Action -- 1. Instinct 2. Physical Movement 3. Push Yourself
You can't Control, how you feel; But you can always choose, how you can act.
உங்கள் நாளை தைரியமாக எதிர்கொள்ள முடியும் (Act with Courage). இதன் மூலம் உங்கள் உடல் நலத்தை உறுதி செய்யலாம். உங்கள் உற்பத்தி திறன் அதிகமாகும். தாமதங்கள், தள்ளிப் போடுதல் அறவே நீக்க முடியும்.
தைரியத்தால் கவலைகளை, பயத்தை, மன அழுத்தத்தை போக்க முடியும் அதன் மூலம் உங்கள் மனதைக் கட்டுப்படுத்த முடியும்.
தைரியத்தால் உங்கள் நடவடிக்கைகளை மாற்ற முடியும், மன உறுதி அதிகரிக்கும். விருப்பப்பட்ட பாதையில் வெற்றிநடை போடலாம். நல்ல உறவுகளை அதிகரிக்கலாம்.
இன்னும் என்ன?
காலை சீக்கிரம் எழ வேண்டுமா? அலாரம் அடித்தவுடன் 5,4,3,2,1 GO
உடற்பயிற்சி செய்ய வேண்டுமா? 5,4,3,2,1 GO
தயக்கங்களை தள்ளிவையுங்கள்!
ஒரு கொசுறு: உண்ணும்போது, உணவு தரையில் விழுந்தால், 5 விநாடிக்குள் அதை எடுத்துவிடவேண்டும்.
உங்களால் வெல்ல முடியும் - ஷிவ் கேரா ( You can Win - Shiv Khera)
1998ல் ஷிவ் கேரா வால் எழுதப்பட்டு வெளியான புத்தகம். 'வெற்றிக்கான வழிகாட்டி' என்று விளம்பரப்படுத்தப்பட்டு, இளைஞர்கள் அதிகம் வாங்கி படிக்கும் புத்தகம் .ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த இவர், அமெரிக்காவில் படித்து,'நார்மன் வின்சென்ட் ப்யலின்' பேச்சால் கவரப்பட்டு, இவரும் சுய முன்னேற்ற பேச்சாளரானார். (அரசியலிலும் ஈடுபட்டார்) என்கிறது விக்கிபீடியா.
இந்தப் புத்தகத்தில் வெற்றிக்கான வழிமுறைகள் என்று படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது.(Step by step guide). இதில் 8 அத்தியாயங்கள் உள்ளன. தலைப்புகளைக் குறிப்பிடுகிறேன். அதுவே உள்ளடக்கத்தைக் கூறும். விரிவாகப் படிக்க, புத்தகத்தை வாங்குங்கள்.
- நடத்தையின்(அல்லது மனநிலையின்) முக்கியத்துவம் - நன்னடத்தையைஉருவாக்குதல் (Importance of Attitude - Building a positive Attitude)
- வெற்றி - வெற்றி பெறுவதற்கான செயல் திட்டங்கள் (Suceess - Winning Strategies)
- செயல் தூண்டுதல் - தினமும் உங்களையும் பிறரையும் தூண்டுதல் (Motivation - Motivating yourself and others everyday)
- சுய கௌரவம் - சுய கௌரவத்தையும், நற்பெயரையும் உருவாக்குதல் (Self Esteem - Building positive self Esteem and image)
- (நல்ல உறவுமுறைகளை உருவாக்குதல் - இனிமையான பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல் (Interpersonal skills - Building a Pleasing Personality)
- ஆழ்மனதும் பழக்கவழக்கங்களும் - நல்ல பழக்கவழக்கங்களையும் பண்பையும் உருவாக்குதல் (Subconscious Mind and habits - Forming Positive habits and Character)
- இலக்கு அமைத்துக் கொள்ளல் - இலக்குகளை அமைத்தலும் அடைதலும் (Goal-setting - Setting and achieving your Goals)
- மதிப்புகளும் நோக்கங்களும் - சரியான காரணங்களுக்காக சரியானவற்றைச் செய்தல் (Values and Vision - Doing the right thing for the right reason)
"வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை, அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாகச் செய்கிறார்கள்."
வெற்றியாளர்கள் - தோல்வியடைபவர்கள், நேர்மறை- எதிர்மறை மனநிலைமை, எண்ணங்கள், நல்ல- தீய பழக்கவழக்கங்கள், தீவிர முயற்சி - முயலாமை இவற்றிற்கிடையேயான வித்தியாசங்களை விளக்கி, இலக்கை நிர்ணயித்து அடைவது எப்படி என்பதை பொன்மொழிகளாக கூறுகிறார் ஆசிரியர்.
----------
அடுத்த கட்டுரையில் இந்த புத்தகஙகள் எல்லாம் உண்மையிலேயே முன்னேற்றத்தையோ, தன்ன்ம்பிக்கையையோ தருகின்றனவா? அலசுவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக