முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற - கைஜென் (KAIZEN)

 ஆயிரம் மைல் பயணமும் சிறிய அடி எடுத்து வைப்பதில்தான் தொடங்குகிறது!


A Journey of Thousand miles must begin with the first step - LaoTsu

இன்ஜினியரிங் துறையில், அதுவும் உற்பத்தி சார்ந்த துறைகளில் உள்ளோருக்கு தெரிந்த, தெரிந்திருக்க வேண்டிய வார்த்தை கைஜென். ஜப்பானிய மொழியில் கைஜென் என்றால் ' நல்ல மாற்றம்' அல்லது 'தொடர் முன்னேற்றம்' என்று பொருள். தரமான பொருட்கள் என்றாலே ஜப்பானிய உற்பத்தியாகத்தான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். இன்றைக்கு அனைத்து துறைகளிலும் பின்பற்றப்படும் தர நிர்வாக நடவடிக்கைகளுக்கு (Total Quality Management)  மூலம் ஜப்பானியர்கள்தான். அதற்கு காரணம் கைஜென் என்ற கோட்பாடு.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால், நலிவுற்ற தொழிற்சாலைகளை (முக்கியமாக ஆயுத உற்பத்தி) சீரமைக்க அமெரிக்க குழு ஒன்றை வரவழைத்தது ஜப்பான். அவர்களில் முக்கியமானவர் எட்வர்ட் டெமிங் (Edward Deming) . (டெமிங்கின் PDCA Cycle விதி பிரபலம்) . அவர்கள் கொடுத்த ஆலோசனைகளின்படி, ஜப்பானிய தொழிற்சாலைகள், கைஜென் என்று செயல்படுத்துகின்றனர். டொயொட்டா (Toyoto),
இதை தொழிற்சாலைக்குள்ளான பயிற்சி ( Training Within Industry -TWI) என்று திறம்பட நடத்தி வெற்றி பெற்றது. அது அமெரிக்காவின் கார் கம்பெனிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி முன்னேறியது.

கைஜென் நடைமுறையின் 5 முக்கிய கூறுகள் (5 Elements of Kaizen Approach)

1. குழுவாக செயல்படு 2.சுய ஒழுக்கம் 3. மன உறுதியை அதிகரித்தல் 4.தர குழுக்கள் 5. முன்னேற ஆலோசனைகள் (Team work, Personal Discipline), Improved Morale, Quality Circles, Suggestions for Improvement)

பின்னர் கைஜென் வங்கிகள், அரசு நிர்வாகம், உடல் ஆரோக்யம், மனநல சிகிச்சை, வாழ்க்கை பயிற்சி ( Life Coaching) போன்ற பல துறைகளிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு கைஜென் இன்ஸ்ட்டியூட் உலகெங்கும் பயிற்சிகள் வழங்குகின்றன. (visit:  kaizen.com)

அமெரிக்காவில் வாஷிங்டனை சேர்ந்த  மனநல மருத்துவரான ராபர்ட் மௌரர்' கைஜென்னை வாழ்க்கையில் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி ஒரு நூலை எழுதியுள்ளார்.

ஒரு சிறிய அடி உங்கள் வாழ்க்கையை மாற்றும் - கைஜென் வழி - ராபர்ட் மௌரர் ( A Small step can change your Life - Kaizen way by Robert Maurer)


எந்த ஒரு செயலானாலும், புதிய முயற்சியானாலும் சிறிய சிறிய அடிகளாகத்தான் எடுத்து வைக்க வேண்டும் என்கிறது கைஜென். அது புதிய பழக்கங்களை ஆரம்பிக்க, தேவையில்லாத பழக்கங்களை கைவிட, புதிய திறனை வளர்த்துக் கொள்ள, பெரிய பிரச்னைகளை எதிர் கொள்ள, உறவு முறைகளை மேம்படுத்த போன்ற எதுவானாலும்.

கைஜென் எப்படி வேலை செய்கிறது?
நமது நடுமூளையில் அமிக்டாலா (Amygdala) என்ற பகுதி உள்ளது. இதுதான் நமது உடலில் அச்சம், பதட்டம், மன அழுத்தம் போன்ற உணர்வுகளை நிர்வகிக்கிறது. மனிதன் வேட்டை சமூகமாக இருந்த காலத்தில், இந்த அமிக்டாலாவின் செயல்பாடு எப்படி இருந்திருக்கும்? ஒரு சிங்கம் எதிர்பட்டால்,
சண்டையிட்டு வெல்ல முடியாது, ஓடி விடு என்று சொல்லும். அதுவே ஒரு குரங்கு மேலே தாவினால், ' அதை அடித்து துரத்து' என்று ஆணையிடும். இந்த "சண்டையிடு அல்லது ஓடிவிடு" (Fight or Flight Response) எதிர்வினையைை அமிக்டாலா, இப்போதும் அதேபோல்தான் தூண்டிக் கொண்டிருக்கிறது.

ஒரு பெரிய பிரச்னையை எதிர்கொள்ள வேண்டுமென்றால், மூளை, வேண்டாம் என்று ந்ம்மை பாதுகாக்கும் மனப்பான்மையிலேயே செயல்படும். எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளவிடாது. 
 ஒரு சிறிய உதாரணம் - வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், அமிக்டாலா அதற்கு பல நேரம் ஆகலாம். உடல் அசுத்தமாகும். சாப்பிட வேண்டும். இப்போது இந்த எளிதான செயலை செய்யலாம் என்று திசை திருப்பும். நாம் ஒரு 5 நிமிடம் இந்த மேஜையை சுத்தம் செய்யலாம் என்று நினைத்தால் அது தடை போடாது. 5 நிமிடம்தானே, மேஜை மட்டும்தானே என்று விட்டுவிடும். பிறகு இன்னும் ஒரு 5 நிமிடம் இந்த அறையையே முடித்துவிடலாமே என்று தோன்றும். இப்படி சிறிய சிறிய செயலாகச் செய்து முழு வீட்டையும் சுத்தம் செய்துவிடலாம். இதை ஆங்கிலத்தில், "முழு திமிங்கலத்தை எப்படி சாப்பிடுவது? கொஞ்சம் கொஞ்சமாக கடித்துதான்" என்பார்கள். அது போலத்தான்.

எனவே நாம் சிறிய செயல்களாக ஆரம்பித்தால், அமிக்டாலா உறக்கத்திலேயே இருக்கும். ஒரு சிறிய மாற்றத்தை ஆரம்பித்தாலே, நமது மூளையில் நியூரான்களிடையே புதிய இணைப்புகள் உருவாகின்றன. மூளை மாற்றத்திற்கு தயாராகி விடுகிறது. மூளை நம்மை மேலும் உற்சாகமாக செயல்பட வைக்கும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், சிறிய அடியை எடுத்து வைப்பதுதான்.

ஒரு பெரிய பிரச்னையை எதிர்கொள்ள வேண்டுமா? சிறிய கேள்விகளாக உங்களையே கேட்கத் துவங்குங்கள், என்கிறது கைஜென். நமது மூளைக்கு சிறிய எளிதான கேள்விகள் ரொம்பப் பிடிக்கும். பிரச்னை பெரியது சிக்கலானது என்றால் சிந்திக்க விடாது. இதை 'மூளையை செதுக்குதல் (அ) வடிவமைத்தல் (Mind Sculpture) என்கிறார்கள். பெரிய நிறுவனங்களோ, சாதனைகளோ, சிறிய யுக்தியில் தொடங்கப்பட்டவையே. 

சிறிய செயல்களால் முழு பலன் அடைய கால தாமதமாகுமே? இல்லவே இல்லை. சிறிய செயல்கள்தான் உங்களிடம் வேகமான மாற்றத்தைக் கொண்டு வந்து, உங்களை வேகப்படுத்தும்.
நீங்கள் உடற்பயிற்சி செய்ய நினைக்கிறீர்கள். காலையில் எழுந்து , வேர்க்க விறுவிறுக்க 2 மணி நேரம் எல்லா பயிற்சியும் செய்கிறீர்கள். அடுத்த நாள் கண்டிப்பாக எழுந்திருக்கவே அமிக்டாலா விடாது. அவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா? உடல் வலிக்கும் என்று சொல்லி தூக்கத்தைத் தூண்டிவிடும். மறுபடி உங்களுக்கு உடற்பயிற்சி எண்ணமே வராது. இப்போது ஒரு 10 நாளைக்கு 5 நிமிடம் மட்டும் உடற்பயிற்சி செய்வது என்று ஆரம்பியுங்கள். தன்னிச்சையாக 5 வது நாளில் 15 நிமிடம், 10 வது நாளில் 30 நிமிடம் என்று செய்ய ஆரம்பித்திருப்பீர்கள்.

புதிய மொழியைக் கற்றுக் கொள்ள ஆர்வமா? தினமும் ஒரு வார்த்தை கற்றுக் கொள்வது என்று ஆரம்பியுங்கள். மாற்றத்தை நீங்களே உணருவீர்கள்.
பணம் சேமிக்க வேண்டுமா? 'சிறுதுளி பெருவெள்ளம்' உங்களுக்கே தெரியும். அமல்படுத்துங்கள்.
செலவைக் குறைக்க வேண்டுமா? டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு செல்கிறீர்கள். தேவையான பொருட்களை எடுங்கள். பில் போடும் முன், நீங்கள் எடுத்ததில் ஒன்றை திரும்பக் கொண்டு வையுங்கள். அது போல் 2,3 முறை நடந்தாலே, தன்னிச்சையாக குறைவான பொருட்களை எடுக்க ஆரம்பிப்பீர்கள்!

மன அழுத்தமாக உணர்கிறீர்களா? ஒரு முறை பலமாக மூச்சை இழுத்துவிடுங்கள். 
உங்களுக்கு நிறைய பிரச்னைகளா? (யாருக்குத்தான் இல்லை?) முதலில் சிறு சிறு பிரச்னைகளைப் பட்டியலிட்டு தீர்வு காணுங்கள். பெரிய பிரச்னைகளைத் தள்ளி போடுங்கள்.
மற்றவருடன் உறவுகளை மேம்படுத்த, சிறு சிறு உரையாடல்கள், சிறு சிறு கேள்விகள் கேட்பது மட்டும் செய்யுங்கள். பெரிய விவாதங்கள்செய்யவோ, சண்டையிட்டு பெரிய தீர்மானங்கள் எடுப்பதையோ செய்யாதீர்கள்.

கைஜென் மற்றும் புதுமைகளை முயற்சிப்பதுதான் வாழ்க்கையின் மாற்றத்திற்கான இரண்டு வழிகள்!

 
Kaizen in Industries

(Images from Google)



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

எங்கே செல்லும் இந்தப்பாதை?

  எங்கே செல்கிறேன்? எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை. (டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம்  மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected. இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan) ', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...