சங்க நூல்கள் அறிமுகம் - 6 பரிபாடல் பாடுவோமே! முதலில் பரிபாடலின் சிறப்புகளைப் பார்ப்போமா? அகமும் புறமும் கலந்து எழுதப்பட்ட எட்டுத்தொகை நூல் பரிபாடல் தமிழின் முதல் பக்தி இசை ப்பாடல் நூல் பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாடல்களுக்கும்; பலவகை அடிகளுக்கும் பரிந்து, பரிந்து செல்லும் ஓசையை உடைய பரிபாட்டுகளின் தொகுப்பாதலால், 'பரிபாடல்' ஆனது. இதில் 20 அடி முதல் 400 அடி வரை உள்ள பாடல்கள் உள்ளன. பரிபாடல் மொத்தம் 70 பாடல்களைக் கொண்டது. ஆனால் நமக்குக் கிடைத்துள்ளவை 22 பாடல்கள் மட்டுமே பரிபாடல்கள் மதுரை யையும், மதுரைக்கு அழகும், வளமும், காப்பும் தந்த வைகை யையும், மதுரையைச் சார்ந்த திருப்பரங்குன்றத்துச் செவ்வேளை யும் (முருகன்), திருமாலிருங்குன்றத்து மாயோனை யும் (திருமால்), கொற்றவை யையும் பாடுகின்றன. 13 புலவர்கள் பாடியுள்ளனர். 7 சான்றோர் பண் வகுத்துள்ளனர் திருமாலைப்பற்றிய 8 பாடல்களில் 7 கிடைத்துள்ளன. செவ்வேளைப் பற்றிய 31 பாடல்களில் 8 கிடைத்துள்ளன. வைகையைப் பற்றிய 26ல் கிடைத்தவை 9 பாடல்கள் பரிபாடலுக்கு பரிமேலழக...
ராஜசேகரின் நண்பர்களுக்கான பதிவுகள்..