சங்க நூல்கள் அறிமுகம் - 4 ஐங்குறு நூறு - இலக்கியச் செறிவு 3 அடி முதல் 6 அடி வரை உள்ள 500 அகப்பாடல்கள் கொண்டது. ஐந்திணைகளுக்கும் 100 பாடல்கள் வீதம், ஐந்து புலவர்கள் பாடியுள்ளனர். மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார் நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார் குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர் பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார் முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார் ஒவ்வொரு திணையிலும் உள்ள 100 பாடல்கள் பத்துப் பத்து பாடல்களாகப் பிரிக்கப்பட்டுத் தனித்தனி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேட்கைப்பத்து, வேழப்பத்து, தெய்யோப்பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும் பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும் பெயர் பெற்றன. மேலும் தொண்டிப்பத்து என்ற தலைப்பின் கீழ் அமைந்த பத்துப் பாடல்களும் அந்தாதி முறையில் அமைந்துள்ளன. அன்னாய்ப்பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது. ஐந்திணைக் கருப்பொருட்களான விலங்குகளையும் பறவைகளையும் அடிப்படையாகக் கொண்டு எருமைப்பத்து, கேழற்பத்து (கேழல்-பன்றி), குரக்குப்ப...
ராஜசேகரின் நண்பர்களுக்கான பதிவுகள்..