முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்கே செல்லும் இந்தப்பாதை?

  எங்கே செல்கிறேன்? எனது வாழ்க்கையை ஒரு பயணமாகத்தான் கருதுகிறேன். வளைந்து, நெளிந்து, பல திருப்பங்களுடன், கரடுமுரடான பயணம்தான் வாழ்க்கை. (டைம் டிராவலை- Time Travel சீக்கிரம் கண்டுபிடிங்கப்பா, அதிலும் பயணப்பட்டு பார்க்கலாம்) பணம் நிறைய உள்ளவர்களுக்கு ஒரு வேளை கொஞ்சம்  மென்மையாக இருக்கலாம். இருந்தாலும்அந்த திருப்பங்களும், கரடுமுரடும்தான் வாழ்க்கையை சுவராசியப்படுத்துகிறது - Expect the Unexpected. இந்த பயணத்தின் ஸ்டியரிங் கடவுள் அல்லது காலத்திடம்தான் உள்ளது. மலையாளத்தில், பஹத் பாசில் நடித்த ' நான் பிரகாஷன் (Njan Prakashan) ', எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்க்கையின் நோக்கம் சந்தோஷம் மட்டும்தான் என்று மிக உணர்வு பூர்வமாக சொல்லியிருப்பார்கள். அதில் சீனிவாசன் பாசிலிடம், " கொஞ்ச நாளைக்கு உன்னோட ஸ்டியரிங்கை என்கிட்ட கொடு" என்பார். அதாவது நான் சொல்றபடி நீ கேள் னு அர்த்தம். அதுபோல,எனக்கு குரு, வழிகாட்டி யாரும் இல்லை. பெரும்பாலும் நிறைய பேருக்கு அப்பாக்கள் அந்த ரோலை எடுத்துக் கொள்கிறார்கள். 'ஆட்டோடிடாக்ட்' (autodidact) ஆகவே வளர்ந்து விட்டதால், யாராவது கொஞ்ச நாளைக்கு இந...

வியத்தகு மனிதர்கள் - எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

பெயரைக் கேட்டாலே சிலிர்த்துப் போய்விடுவேன், எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களை. (இனி 'பாலா' என்றே குறிப்பிடுகிறேன் டைப் பண்ண வசதி). அவர் மறைவை ஒட்டி எல்லோரும் எழுதிவிட்டார்கள். இருந்தாலும், அந்த மனிதருள் மாணிக்கத்தைப் பற்றி நான் எழுதாவிட்டால் என் ஜென்மம் ஈடேறாது. இந்திய அரசு பாலா அவர்களுக்கு ' பத்ம விபூஷன்" விருது அறிவித்துள்ளது. ஏற்கனவே 'பத்மஸ்ரீ ' பத்ம பூஷன்' பெற்றுவிட்டார், பாடல்களுக்கு 6 தேசிய விருதுகள்.  நான் தமிழில் எனக்கு பிடித்த பாடல்கள் என்று 750 பாடல்கள் வைத்திருக்கிறேன். அதில் 300 பாடல்கள் பாலா- இளையராஜா பாடல்கள் இருக்கும். பாலா மற்ற இசை அமைப்பாளர்களின் இசையில் பாடியது 150 இருக்கும். இப்போதும் வாரத்தில் 10 பாடல்களாவது அவரது பாடல்களைக் கேட்கிறேன். மனிதர்கள் இருக்கும் போது அவர்களது மதிப்பு தெரியாது என்பார்கள்: ஆனால் பாலு இருக்கும்போதும் மதிப்பு மிக்கவராகத்தான் இருந்தார். இறந்த பின்னால் இன்னும் உள்ளங்களில் ஒளி வீசிக்கொண்டுள்ளார். FB யிலும் யூடியூபிலும் அவரது கோடானுகோடி ரசிகர்கள் அவர் பெயர் இருக்குமிடமெல்லாம் கதறிக் கொண்டுள்ளனர். ஒரு மனிதன் எப்படி வாழ...

நீண்டஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ - இக்கிகாய் (IKIGAI)

      - ஜப்பானியர்கள் உலகுக்கு சொல்லும் சேதி! ஜப்பானில்  28% மக்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். அங்கு உள்ள ஒக்கினாவா (Okinawa) என்ற அழகிய தீவில் வாழ்பவர்களில் ( 15 லட்சம் பேர்) - 1 லட்சம் பேருக்கு 25 பேர் வீதம் 100 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர். இது உலக சராசரியைவிட மிகமிக அதிகம்.  இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு தாக்குதலில் 2 லட்சம் பேரை இழந்து, கதிர்வீச்சினாலும் பாதிக்கப்பட்ட 'ஹிரோஷிமா' வில் உள்ளது, ஒகிமி (Ogimi) என்ற கிராமம். 3800 பேர் உள்ள அந்த கிராமத்தில் 14 பேர் 100 வயதைக் கடந்தவர்கள்; 158 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். அது உலகில் அதிக வயதானவர்கள் இருக்கும் கிராமம் (Village of Longevity) என அழைக்கப்படுகிறது. அதுவும் எல்லோரும் சுறுசுறுப்போடு இயங்கிகொண்டுள்ளனர். நோய் வாய்ப்படுவோர் மிகக் குறைவு, மிக எளிதாக குணமும் பெறுகின்றனர்.  வசந்தமோ, குளிரோ, வேனிலோ, இலையுதிரோ அனைத்தையும் அனுபவிக்கின்றனர், ஆனந்தமாய். எப்படி? அமிர்தம் உண்கின்றனரோ? கடவுளிடம் வரம் பெற்றனரோ?         இல்லை. அவர்கள் கூறுவது 'இக்கிகாய்'....

எங்கே தேடுவேன்? - பணம்

      " எங்கே தேடுவேன்? உலகம் செழிக்க உதவும் பணத்தை                                  எங்கே தேடுவேன்? அரசன் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை எங்கே தேடுவேன்? "         - இது 1952 ல் 'பணம்'  என்ற திரைப்படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் பாடியது.  இன்றுவரை, அதன் சாராம்சத்தில் எதுவும் மாறவில்லை. மாறாக, ரூபாய் மதிப்பைப் போல பல மடங்கு பணத்தின் தேவை எல்லோருக்கும் அதிகரித்துவிட்டது. பணம் - மனிதனின் மூச்சுக்காற்றுக்கு அடுத்தபடியாக உயிர் வாழ தேவைப்படுகிறது. அன்றே சொல்லிவிட்டார்கள்- "பணம் இல்லாதவன் பிணம்' என்று.  "தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசுமுன் செல்லாதடி"   - இது பராசக்தி படத்தில் உடுமலை நாராயணகவி அவர்கள் எழுதிய பாட்டு. இதுவும் 1952 ல் வந்த திரைப்படம். பணத்தின் சக்தியை பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருப்பார். இதில் "பிணத்தை கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே பணப்பெட்டி மேல கண் வையடா தாண்டவக்கோனே"   என்று வரும். பணம் இல்லாமல் பாதிக்கப்பட்டவ...

திரைப்பார்வை - மாறா

மாறா இந்தத் திரைப்படம் வருமுன்பே, ' மலையாள "சார்லி" ரீமேக் என்றதனால், எனக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. சார்லியை 2 முறை பார்த்திருக்கிறேன். என் எதிர்பார்ப்புக்கு ஈடாக இருந்ததா? கடைசியில் சொல்கிறேன். அடிக்கடி சார்லியும் மனதில் நிழலாடுவதால் அதோடு ஒப்பீட்டையும் கலந்தே சொல்கிறேன். தமிழில் வந்துள்ள அடுத்த பயணக்கதை (முன்னர் அன்பே சிவம், பையா).  கதாநாயகிக்கு (ஸ்ரதா ஸ்ரீநாத்) பயணத்தில் ஆர்வம். தனக்கு திருமணம் நிச்சயிப்பது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி பயணப்படுகிறாள். அப்போது தான் சிறுவயதில் வேறு ஒருவரிடம் கேட்ட கதையை யாரோ வீடுகளின் வெளிச்சுவர்களில் பெரிய பெரிய சித்திரங்களாக வரைந்து வைத்திருப்பதை காண்கிறாள். யார் வரைந்தது என்றால் மாறா என்கிறார்கள். அவள் வாடகைக்கு பிடிக்கும் வீடும் மாறா இருந்த வீடு. அந்த வீட்டில் பல கலைநயமிக்க பொருட்களை காண்கிறாள். கூட ஒரு நோட்டில் ஒரு சம்பவத்தை படங்களாக வரைந்து வைத்திருக்கிறான். அதுவும் முடிவில்லாமல் இருக்கிறது. அதன் முடிவு என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும், மாறாவின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பினாலும், அவனைப்பற்றி தெரிந்தவர்களிடம்  விசாரி...

எனக்கு தெரிந்த வாழ்க்கை தத்துவம்

வாழ்க்கை தத்துவத்தை அறிந்தவர் உண்டோ?  பலரும் பலவிதமாக கூறுகின்றனர். அவரவருக்கு தெரிந்த மாதிரி. கேட்பவருக்கு ஏற்ற மாதிரி. மனிதன் தோன்றிய காலம் முதல் வாழ்க்கைமுறை மாறிக்கொண்டே வருவது போல, மனித மனங்களும் மாறிக்கொண்டே வருகிறது.    ஷேக்ஸ்பியர் ' சொன்னார் 'உலகம் ஒரு நாடகமேடை; நாமெல்லாம் நடிகர்கள்' என்று.  சற்றே கற்பனை செய்தால் சரியென்றே தோன்றுகிறது. பெரிய மேடை, 780 கோடி நடிகர்கள் (உலக மக்கள்தொகை).  ஒவ்வொருவரின் கதாபாத்திரம், தன்மை ( Role , Character, casting), வேறுவேறு. சூழலை (situation) மட்டும் இயக்குபவர்- கடவுள். அப்படியானால் கடவுள் இருக்கிறாரா என்று கேட்கிறீர்களா? வேதங்களையும், சங்க நூல்களையும், சனாதன தர்மத்தையும் நம்பும் நான் ஆத்திகன். கடவுள் இருக்கிறார் என்றுதான் கூறுவேன்.  சுஜாதா ' கடவுள் தேவைப்படுகிறார்' என்கிறார் ( அவரது ' கடவுள் இருக்கிறாரா' - வாசியுங்கள், நல்ல அனுபவம் -  சிந்திக்க வைத்துவிடுவார்) நினைத்துப்பாருங்கள். 780 கோடி மனிதர்களுக்கும் குணாதிசயம், சூழல் வேறுவேறு. அண்ணன் தம்பி, ஏன் இரட்டையருக்கு கூட ஒரே மாதிரி இல்லை. உனக்கு கொடுக்கப்பட்ட...

வியத்தகு மனிதர்கள் - எலான் மஸ்க்

எலான் மஸ்க் (ELON MUSK) "நிஜ உலக டோனி ஸ்டார்க் (IRON MAN)" இந்த ஆண்டு சுமார் 200 பில்லியன் டாலர் நெட் வொர்த்தோடு பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு வந்துள்ளார் எலான் மஸ்க். என்னை மிகவும் கவர்ந்த மனிதர். பல்துறை வித்தகர். பொதுவாக பணக்காரர்கள் பட்டியலை நோக்கினால், பெரும்பாலும் ஒரு துறையில் வெற்றி பெற்று பணம் ஈட்டியவர்களே  இருப்பார்கள். உதாரணத்திற்கு, பில் கேட்ஸ் - சாப்ட்வேர், வாரன் பபெட் - ஸ்டாக் எக்சேஞ்ச், மார்க் சுக்கர்பெர்க் - சமூக வலைத்தளம் (FB), ஜெப் பஸோஸ் - வணிகம் (Amazon) போல. ஆனால் எலானோ 4 துறைகளில் வல்லுனராகவும், வெற்றியாளராகவும் திகழ்கிறார்.  சாப்ட்வேர், ஏரோசயின்ஸ், ஆட்டோமொபைல்ஸ், நியூரோ டெக்னாலஜி என்ற நான்கு துறைகளிலும் புதுமைகளைப் புகுத்தி புதிய உலகத்தையே உருவாக்கி வருகிறார். எலானுக்கு பணம் சம்பாதிப்பதைவிட புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குவதில்தான் அதிக அக்கறை. அதுவே அவர் தனிப்பண்பு. சிறிய வாழ்க்கை குறிப்பு 49 வயதாகும் எலான்,  தென் ஆப்பிரிக்காவில் எளிய குடும்பத்தில் பிறந்தவர். 12 வயதிலேயே கோடிங் (Coding) கற்று 'ப்ளாஸ்டெர்'(Blaster) என்ற வீடியோ கேமை உரு...

நானும் எழுத்தும்

முன்னுரை இனிய உள்ளங்களுக்கு அன்பு வணக்கங்கள்! இதோ நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன். கடந்த பத்தாண்டுகளாக எழுதவேண்டும் என்ற ஆவல் வந்து வந்து போகும். முன்பு அது பள்ளி காலம் முதல் 1990 வரை எனக்குள்  இருந்தது. பின் வாழ்க்கை சூழலில்  அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. அதுவும் அப்பொதெல்லாம் எழுத பத்திரிக்கைகள் மட்டுமே இருந்தன. இப்பொது FB, Twitter, Quora, Instagram, Pinterest, போல பல தளங்கள். அனைத்திலும் பகிரவும் எளிது. 55 வயதை கடந்து வாழ்க்கையின் மூன்றாவது பருவத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிடும்போது முதல் இடத்தில் எழுத்துதான் வந்தது. எனது முக்கிய ப்ராஜெக்ட்டுக்கு(Web Portal) ஆதாரம் எழுத்து (Content Writing). எனவே பயிற்சிக்க ப்ளாக்கில் தொடங்கலாம் என்று துவங்கிவிட்டேன்.  வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் எழுதாமல் போனால் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டு வைப்பதுமாதிரி. யாருக்கும் பயன் இல்லை. அதுவும் 'சுஜாதா' அவர்களை பிதாமகராக சுஜாதா கொண்டவர்கள் எழுதாமல் போனால் அவர் எழுத்துகளை படித்த புண்ணியம் சேராது. (கோரா (Quora )வில் 'ரங்க ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் நிறைய எழுதுகின்றனர்.) நான் ஏ...