முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வியத்தகு மனிதர்கள் - நம்மாழ்வார்

 வேளாண் விஞ்ஞானி, இயற்கை போராளி நம்மாழ்வார் அவர்கள், இந்திய அளவில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து, நாடு முழுவதும் இயற்கை விவசாயப் பண்ணைகள் உருவாகக் காரணமானவர். ' லீசா ' மற்றும் ' குடும்பம் ' அமைப்புகள் மூலமாக ' கொழிஞ்சி', 'வானகம்' போன்ற இயற்கை வேளாண்மைப் பண்ணையை உருவாக்கியவர்.  1996ல்  மரபு விதைகளை மீட்டெடுக்க, நாடுதழுவிய விதைப் பயணம்  மேற்கொண்டார். (மாப்பிளை சம்பா, யானைக் கவுணி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் பல்வேறு மரபு காய்கறி, கீரை விதைகளை மீட்டல்), வேம்புக்கான காப்புரிமையை மீட்க போராடியவர். 2001 ல் நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி 500 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார். 2005 ல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் நிலங்களில் கடல் நீர் புகுந்து உவர் மண்ணாகியதை 6 மாதத்தில் விளைநிலங்களாக்க செயல்பட்டார். மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளின் அழிவைத் தடுத்து நிறுத்த போராடினார். இறுதியாக டெல்டா ஏரியாக்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தைத் துவக்கினார். அந்த திட்டத்துக்குதான் தான் எதிரி, மீத்தேனுக்கல்ல; அரசு சாண எரிவாயு அடுப்...

வியத்தகு மனிதர்கள் - Dr. APJ அப்துல் கலாம்

  வாழ்க நீ எம்மான்! "இறைவா, என் நாட்டு மக்களுக்கு உள்ள உறுதியைக் கொடுத்து, கல்வியிலும், தொழிலிலும், விவசாயத்திலும், கணிப்பொறியிலும் உயர்ந்த நாடாக உழைத்து முன்னேற அருள் கொடையைக் கொடுப்பாயாக"     - இது   கலாம் அய்யா அவர்கள் ஒரு பத்திரிகையில் எழுதிய பிரார்த்தனை. சற்றே நினைத்துப்பாருங்கள்; இன்றைய காலகட்டத்தில் நாட்டுக்காக பிரார்த்திக்கும்  தலைவர்கள் யாராவது இருக்கிறார்களா? இந்த பிரார்த்தனையுடன் துவங்கும் ' அக்னிச்சிறகுகள்' என்ற  கலாம் அய்யா அவர்களின் சுயசரிதையில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியவற்றை தெரிவிப்பதே இந்தக் கட்டுரை. அக்னிச்சிறகுகள் - ஆ.பி.ஜெ. அப்துல் கலாம் கலாம், அவரது அன்னை ஆஷியம்மா அவர்கள் மீது கவிதை பாடித் தொடங்குகிறார் -   'கடல் அலைகள். பொன் மணல்,  புனித யாத்ரீகர்களின் நம்பிக்கை இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு இவையெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ என் அன்னையே'   - என்று துவங்கி, அவரது அன்பினை நினைவு கூர்ந்து 'நாம் மீண்டும் சந்திப்போம் அந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில்'  - என்று முடிக்கிறார். (இப்போது  உங்கள் ஆத்மா சாந்த...

பிட்காயின் மைனிங் எப்படி செயல்படுகிறது?

  வியக்கவைக்கும் டெக்னாலஜி! பிட்காயின் ஒரு கிரிப்டோகரன்சி. கிரிப்டோக்ராபி (Cryptography) தெரியுமல்லவா? முக்கிய ரகசியங்களைப் பாதுகாக்க, அதை ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து பூட்டி, அந்த பாஸ்வேர்டைக் கண்டுபிடிக்க ஒரு புதிர் (Puzzle) கொடுப்பார்கள். நீங்கள் அந்த புதிருக்கான விடையைக் கண்டுபிடித்து, பாஸ்வேர்டைப் பெற்று திறக்க வேண்டும். The Da Vinci Code படத்தில் வருமே. அதுதான். அதே டெக்னாலஜியை கிரிப்டோகரன்சியை உருவாக்க பயன்படுத்துகின்றனர். Cryptographic Hash Function என்ற வழிமுறையில் (Algorithm) பெரிய டேட்டாக்களைக் கொடுத்து, 64 இலக்க ஹேஷ் (Hash) களாகப் பெறுவார்கள். அதாவது அவர்கள் கொடுக்கும் கணிதப்புதிரை ( Mathematical Puzzle) வைத்து பிட்காயினுக்கான ஹேஷைக் கண்டுபிடிக்கவேண்டும் (Proof of work). அதிகமான பேர்கள் கண்டுபிடிக்க இறங்கினால் கடினமான புதிர்களாக வரும். அதேபோல் ஆரம்ப காலத்தில் எளிமையாகவும், இப்போது 88% பிட்காயின்கள் வெளியான பிறகு கடினமாக இருக்கும். கடினம் என்றால் கண்டுபிடிக்கும் கால அளவு அதிகமாகும்.  இந்த செயல் GPU (Graphic Processing Unit)  அல்லது ASIC (Application Specific...

கம்ப்யூட்டர் அச்சடிக்கும் பணம் - கிரிப்டோகரன்சி, பிட்காயின்

கிரிப்டோகரன்சி ஒரு அறிமுகம் நிறைய பணம் வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? உழைத்து சம்பாதிக்க வேண்டும். நேரடியாக நாமே பணத்தை உருவாக்கிவிட்டால்? அது அரசாங்கத்தால் மட்டும் தானே முடியும் என்று நினைக்கிறீர்களா? கம்ப்யூட்டரும் இணைய வசதியும், அதற்கு தேவையான மின்சாரமும் இருந்தால் போதும். நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதை கிரிப்டோகரன்சி என்கின்றனர். இப்போது அடிக்கடி  பிட்காயின்  என்கிறார்களே, அது ஒரு கிரிப்டோகரன்சிதான்! இந்த கட்டுரையில் கிரிப்டோகரன்சி பற்றி எளிமையாக, மேலோட்டமாக கூறுகிறேன். அடுத்த கட்டுரையில் கொஞ்சம் டெக்னிக்கலாக, எனக்கு தெரிந்தவரை கூறுகிறேன்.  பணம் நம்மிடம் காகிதமாக இருக்கிறது. மற்ற சொத்துக்கள் தங்கமாகவோ, பொருட்களாகவோ இருக்கும். இந்த கிரிப்டோகரன்சிக்கு எந்த உருவமும் இல்லை. காற்றில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு சுமார் 26-35 இலக்க எண் அவ்வளவுதான். (உதாரணம் -   17K9yGu5UBTeyHNdzQ5sR3aSFRzu6Ae7JZ )     பணப்பரிவர்த்தனைக்கும், சேமிக்கவும் வங்கிகள் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படுகின்றன. அதாவது சேவைக்கு கட்டணம் வசூலித்து, நமது கணக்கு...

வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற - கைஜென் (KAIZEN)

  ஆயிரம் மைல் பயணமும் சிறிய அடி எடுத்து வைப்பதில்தான் தொடங்குகிறது! A Journey of Thousand miles must begin with the first step - LaoTsu இன்ஜினியரிங் துறையில், அதுவும் உற்பத்தி சார்ந்த துறைகளில் உள்ளோருக்கு தெரிந்த, தெரிந்திருக்க வேண்டிய வார்த்தை கைஜென் . ஜப்பானிய மொழியில் கைஜென் என்றால் ' நல்ல மாற்றம்' அல்லது 'தொடர் முன்னேற்றம்' என்று பொருள். தரமான பொருட்கள் என்றாலே ஜப்பானிய உற்பத்தியாகத்தான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். இன்றைக்கு அனைத்து துறைகளிலும் பின்பற்றப்படும் தர நிர்வாக நடவடிக்கைகளுக்கு (Total Quality Management)  மூலம் ஜப்பானியர்கள்தான். அதற்கு காரணம் கைஜென் என்ற கோட்பாடு. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால், நலிவுற்ற தொழிற்சாலைகளை (முக்கியமாக ஆயுத உற்பத்தி) சீரமைக்க அமெரிக்க குழு ஒன்றை வரவழைத்தது ஜப்பான். அவர்களில் முக்கியமானவர் எட்வர்ட் டெமிங் (Edward Deming) . (டெமிங்கின் PDCA Cycle விதி பிரபலம்) . அவர்கள் கொடுத்த ஆலோசனைகளின்படி, ஜப்பானிய தொழிற்சாலைகள், கைஜென் என்று செயல்படுத்துகின்றனர். டொயொட்டா (Toyoto), இதை தொழிற்சாலைக்குள்ளான பயிற்சி ( Training...

சுய முன்னேற்றப் புத்தகங்கள் - ஒரு அலசல்

 கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த சொல்லும் எவ்வளவு நாள் வரும்? இன்றைக்கு உலகம் முழுவதும் கதையல்லாத (Nonfiction) புத்தகங்களில் சுய முன்னேற்றப் புத்தகங்கள்தான் அதிகம் விற்கின்றன. மக்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஏதாவது உந்துசக்தி தேவைப்படுகிறது. அது கடவுளிடமோ, ஆன்மீகத்திலோ அல்லது புத்தகங்களில் மட்டுமே கிடைக்கிறது. புத்தகங்களிலும் ஜோதிடப் புத்தகங்களை நாடி, வருங்காலம் எப்படி உள்ளது என அறிய ஆசைப்படிவோர் ஒரு சாரார். இளைஞர்கள் பெரும்பாலும்  சுய முன்னேற்றப் புத்தகங்களையே நாடுகின்றனர். அதுவும் புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்துவிட்ட கம்ப்யூட்டர் காலத்தில், இந்தப் புத்தகங்கள்தான் வாசிப்பு பழக்கத்தை கொண்டு வருகின்றன. எனது ஆங்கில வாசிப்பு கல்லூரி காலத்தில் தொடங்கியது. அதுவும் நாவல்கள், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் ல் தொடங்கி, ஹெரால்டு ராபின்ஸ், அலிஸ்டர் மெக்லின், ப்ரெட்ரிக் போர்சித், இர்விங் வாலஸ் என்று தொடர்ந்தது. தமிழில் சுஜாதா போல ஆங்கிலத்தில் பிடித்த எழுத்தாளர் ராபர்ட் லட்லம் தான். அப்போதெல்லாம் நண்பர்களில் அறிவுஜீவிகள்  சுயமுன்னேற்றப் புத்தகங்களையே படிப்பதாக பந்தா விடுவார்கள். அவற்றில் ...

திரைப் பார்வை - த்ரிஷ்யம் -2 (மலையாளம்)

  நல்ல படம் பார்க்கணுமா? இதோ! பொதுவாக, சினிமாவில் இரண்டாம் பாகம் என்றாலே எனக்கு அலர்ஜி. எப்போதுமே முதல் படம்தான் அசலான புதிய கதையோடு சிறப்பாகவும் அமைந்திருக்கும் என்பது எனது கருத்து. முதல் பாக வெற்றியை வைத்து மீண்டும் கல்லா கட்டவே இரண்டாம் பாகம் எடுப்பார்கள். (பாகுபலி போன்று ஒரே கதையை பாகங்களாக பிரித்து எடுப்பது வேறு) அந்த வகையில் இரண்டாம் பாகம் எடுக்கப் போகிறோம் என்ற அறிவிப்பு வந்தபோது, முதல் பாகத்தின் இனிய நினைவுகளையும் சிதைத்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. போதாக்குறைக்கு, ஜீத்து ஜோசப்பின் அடுத்தடுத்த படங்களும் அவவளவு சிறப்பாக இல்லை. ஆனால், 2013 ல் வந்த முதல் பாகத்தின் அச்சு மாறாமல் அதன் தொடர்ச்சியாகவே கதை நகர்கிறது. அதே பரபரப்போடு, ஜார்ஜ் குட்டியின் குடும்பத்திற்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்ற பதைபதைப்போடு பார்த்து ரசிக்கும் வகையில் கதை எழுதி இயக்கியுள்ளார் ஜீத்து. முதல் பாகத்திற்கு 6 வருடத்திற்கு பின் கதை தொடங்குகிறது.  முதற் காட்சியிலேயே அந்த பரபரப்பை கொண்டுவந்துவிடுகிறார்.  ஜார்ஜ் குட்டி இப்போது சற்று வசதியானவராக, சினிமா தியேட்டர் ஓனராக வருகிறார். சினிமா தயாரிக்க...